tamilnadu

img

திருவள்ளூர் மாவட்டத்தில் 51 ஆயிரம் வீடுகளுக்கு ரேசன் பொருட்கள் நேரடி விநியோகம்

திருவள்ளூர் மாவட்டத்தில்  51 ஆயிரம் வீடுகளுக்கு ரேசன் பொருட்கள் நேரடி விநியோகம்

திருவள்ளூர், ஆக.14- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 51 ஆயிரம் பயனாளி கள் இல்லத்திற்கு ரேசன் பொருட்கள் வழங்க  நட வடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நாசர் தெரி வித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் 1102 நியாய விலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 37,990 குடும்ப அட்டை களில் உள்ள 47,193 பயனா ளர்களும், 3,441 குடும்ப அட்டைகளில் உள்ள 4,660 மாற்றுத்தினாளிகளும், என மொத்தம் 41,431 குடும்ப அட்டைகளில் உள்ள 51,853 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநி யோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  இத்திட்டத்திற்காக நியாய விலைக்கடைகளை குழுக்க ளாக பிரிக்கப்பட்டு நகர்புற பகுதியில் செயல்படும் 124 நியாயவிலைக்கடைகளை ஒருங்கிணைத்து 80 குழுக்க ளாகவும்   கிராமப்புற பகுதி யில் செயல்படும் 978 நியாய விலைக்கடைகளை ஒருங்கி ணைத்து 474 குழுக்களாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கடைகள் செயல்பட ஏதுவாக ஊரகப்பகுதியில் 567 வாகனங்கள் மற்றும் நகர்பகுதியில் 111 வாக னங்கள் என ஆக மொத்தம் 678 வாகனங்கள் மூல மாக குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட வுள்ளது தமிழர் நலத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார். இதில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.