tamilnadu

img

சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெண்களையும், பெண்கள் அமைப்புகளை இழிவுபடுத்தி பேசி வரும் நாம்  தமிழர் கட்சித் தலைவர் சீமானை கைது செய்ய வலியுறுத்தி வியாழனன்று  (ஜூலை 17)  நெற்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரவாயல் பகுதித் தலைவர் சித்ரா தலைமை யில் நடைபெற்ற   போராட்டத்தில் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி, செயலாளர் ம.சித்ரகலா, பகுதிச் செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் தமிழ்செல்வி, துணைத் தலைவர் கவிதா  உள்ளிட்டோர் பேசினர்.