சாலையோர வியாபாரிகளின் நலன் கருதி போக்குவரத்து பாதிப்பு இல்லாத 100 அடி சாலை உள்ள எம்கேபி நகர் சென்ட்ரல் அவென்யூ, விம்கோ நகர் மார்க்கெட், காலடிப்பேட்டை மார்க்கெட் ஆகிய பகுதிகளை விற்பனை மண்டலமாக அறிவிக்க கோரி சென்னை மாநகராட்சி ஆணையரிடம் சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயராமன், செயலாளர் டி.வெங்கட், பொருளாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன், நகர விற்பனைக் குழு உறுப்பினர் ஜி.மோனிஷா ஆகியோர் மனு அளித்தனர்.