களைக்கட்டிய தீபாவளி வர்த்தகம் வண்ணாரப்பேட்டையில் குவிந்த மக்கள்!
சென்னை, அக்.19- தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், கடைசி நாளான ஞாயிறன்றும் சென்னையில் பல கடைகளில் பொது மக்கள் புத்தாடை, இணிப்பு, பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். தீபாவளி என்றாலே புது ஆடை அணி வது, இனிப்பு கொடுப்பது மற்றும் பட்டாசு வெடிப்பது என்பது பழக்கமாக உள்ளது. எனவே, புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக பொதுமக்கள் பலரும் கடந்த சில நாட்களாகவே தீபாவளி ஷாப்பிங்கை விறு விறுப்பாக செய்து வந்தனர். அந்த வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜவுளிக் கடைகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருந்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், ஞாயிறன்று தீபாவளி பர்சேஸ் இறுதிக் கட்டத்தை எட்டியது. இந்த நிலையில், சென்னையில் உள்ள தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப் பேட்டை, பாடி, அண்ணா நகர் பஜார் பகுதி களில் உள்ள ஜவுளிக் கடைகளில் திரு வள்ளுர் மற்றும் சென்னை புறநகர் பகுதிக ளைச் சேர்ந்த பொதுமக்கள் காலை முதலே குவியத் தொடங்கினர். இதனால், கடை களில் கூட்டம் அதிகமாக இருந்தது. வடசென்னையில் “வண்ணாரப்பேட்டை ஜவுளி கடைகளுக்கு மிக பிரபலமான இடம். இங்கு, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான மக்கள் புத்தா டைகளை வாங்கிச்சென்றனர். கடந்தாண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு குழந்தைகளின் துணி விலை சற்று அதிகரித்துள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
