tamilnadu

img

இலவச குடிமனை பட்டா வழங்க ராயபுரம் எம்எல்ஏவிடம் சிபிஎம் மனு

இலவச குடிமனை பட்டா வழங்க  ராயபுரம் எம்எல்ஏவிடம் சிபிஎம் மனு

சென்னை, செப். 18- ராயபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தியிடம் மனு அளித்தார். அதில், ராயபுரம் பகுதிக்குட்பட்ட 52, 53ஆவது வட்டங்களில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி சிபிஎம்  சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போராட்டம் நடத்தினோம். அப்போது குடிமனை பட்டா இல்லாத அனைவருக்கும் 2025 ஜூன் மாதத்திற்குள் வழங்கப்படும் என்று தெரிவித்தீர்கள். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் தற்போது அந்த பணிகள் நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. எனவே தாங்கள் தலையிட்டு அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர், இலவச குடிமனை பட்டாவிற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், குடிமனை பட்டா இல்லாத அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளதாக நிர்வாகிகள் கூறினர். இதில் நிர்வாகிகள் டி.வெங்கட், எம்.எஸ்.ஜுகைப், என்.ராஜேஷ்,குமார், அமைப்புசாரா பகுதி துணை தலைவர் ஆறுமுகம், ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.