சென்னை:
சென்னை துறைமுகம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர்பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார்.சென்னையில் திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளை சேகர்பாபு முன் னின்று நடத்தி வந்தார். சமீபத்தில் நுங்கம் பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் விவசாயிகளுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்திலும் அவர் பங்கேற்றார்.இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. திமுக நிகழ்ச்சிகளில் முகக் கவசம் அணிந்து பங்கேற்று வந்த நிலையிலும் சேகர்பாபுவுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.