tamilnadu

img

நகர விற்பனைக்குழு முடிவுக்கு மாறாக கடைகளை மாநகராட்சி அகற்றக்கூடாது

நகர விற்பனைக்குழு முடிவுக்கு மாறாக கடைகளை மாநகராட்சி அகற்றக்கூடாது

வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

 

சென்னை, செப். 10 - நகர விற்பனைக்குழு முடிவின்படியே மாநகராட்சி செயல்பட வேண்டும். தன்னிச்சை யாக கடைகளை அகற்றக் கூடாது என்று வியா பாரிகள் வலியுறுத்தி உள்ளனர். நாகேஸ்வரன் சாலை சிறுவியாபாரிகள் சங்கம், மேற்கு பகுதி உஸ்மான் சாலை சிறுவியா பாரிகள் சங்கம், சிவாவிஷ்ணு கோயில் சிறுவியா பாரிகள் சங்கம், நேதாஜி சிறுவியாபாரிகள் சங்கம், கமாகத்மா காந்தி சிறு வியாபாரிகள் சங்கம் ஆகிய அமைப்புகளின் சிறப்பு பேரவைக் கூட்டம் செவ்வாயன்று (செப்.9) சிஐடி நகரில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், மண்டல வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர விற்பனைக்குழு கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை கிடைக்காதவர்களுக்கு வழங்குவதோடு, விடுபட்டுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும். நகர விற்பனைக்குழு முடிவின்படி தெரு வோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்த வேண்டும். மாற்று இடம் வழங்காமல் கடை களை அகற்றக்கூடாது. புதிய கடைகள் ஒதுக்கீடு செய்யும் இடங்களில் அரசின் தேசிய கொள்கை மற்றும் சட்டம் குறிப்பிட்டுள்ளது போல் அடிப்படை வசதிகளை உருவாக்கி தர வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி உஸ்மான் சாலையோர வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பெருவாரியாக வியாபாரம் நடைபெறும் இடங்களை விற்பனை மண்டல மாக அறிவிக்க வேண்டும். தெருவோர வியாபாரிகளின் குறைகளை தீர்க்க நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்திற்கு சென்னை மாநகர் சிறுவியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு துணைத்தலைவர் பி.மணிமாறன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.வி.கிருஷ்ணன், துணைத்தலைவர்கள் இ.எம்.முஸ்தபா, ஏ.முகம்மது, 10வது மண்டல நகர விற்பனைக்குழு உறுப்பினர்கள் எஸ்.கருணாநிதி, எஸ்.சித்ரா, எஸ்.கண்ணன், எம.ரேவதி, சி.செல்லையா, ஏ.முகம்மது இப்ராஹிம் உள்ளிட்டோர் பேசினர். ஏ.அஸ்ரப்அலி நன்றி கூறினார். முன்னதாக எஸ்.கண்ணன் வரவேற்றார்.