tamilnadu

img

ஒரு வருடமாக ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியமில்லை.... ஒப்பந்தத்தை செயல்படுத்தக் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்

சென்னை;
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரு வருடமாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி செவ்வாயன்று (டிச.22) சென்னையில் பிஎஸ் என்எல் ஊழியர்கள் பெருந் திரள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பிஎஸ்என்எல் நிறுவனத் தில் 80 ஆயிரம் நிரந்தர ஊழியர்களை கட்டாயப்படுத்தி மத்திய அரசு விருப்ப ஓய்வில் அனுப்பியது. அதன்பிறகு கான்ட்ராக்ட் ஊழியர்களையும் பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும், ஆட்குறைப்பு செய்யக் கூடாது என வலியுறுத்தி திங் களன்று (டிச.21) சென்னை கிரீம்ஸ் சாலை பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகத்தில் உண்ணா நிலைப் போராட்டம் நடைபெற்றது.

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கங்களின் தமிழ்நாடு மாநிலம் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக செவ் வாயன்று (டிச.22) பெருந் திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தினடையே செய்தியாளர்களிடம் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.செல்லப்பா கூறியதாவது:தமிழகத்தில் 5000க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக ஊதியம் வழங்கப் படவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபிறகும் முழுமையாக ஊதியம் வழங்கப்படவில்லை. உடனடியாக அனைவருக்கும் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

80 ஆயிரம் நிரந்தர ஊழியர்கள் விருப்ப ஓய்வில் வெளியேற்றி விட்டனர். இதனால் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் 60 ஆயிரம் ஒப்பந்த ஊழியர் களை வெளியேற்றி உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரம் ஒப்பந்த ஊழியர் களை வெளியேற்றி உள்ளனர். இதன்காரணமாக தொலைபேசி சேவை வழங்கமுடியவில்லை. கடந்த நவம் பரில் மட்டும் 10 ஆயிரம் லேண்ட் லைன், 6 ஆயிரம் பிராட்பேண்ட், 2.50 லட்சம் செல்போன் இணைப்புகளை சந்தாதாரர்கள் சரண்டர் செய்துள்ளனர்.இவற்றை சரிசெய்ய வேண்டும், ஒப்பந்த ஊழியர் களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதோடு, பணிநீக்கம் செய்யக் கூடாது என்று கடந்த மாதம் போராட் டம் நடத்தினோம். அதனடிப்படையில் நவ.5 அன்று பேச்சுவார்த்தை நடத்திய தலைமை பொதுமேலாளர் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார். ஆனால் அதனை நிர்வாகம் அமல் படுத்தவில்லை. அதன்பிறகு பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் நிர்வாகம் ஒப் பந்தத்தை அமல்படுத்தாமல் உள்ளது.

எனவே, ஒப்பந்த ஊழியர் களோடு நிரந்தர ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நிர்வாகம் உடன்பாட்டை செயல்படுத்த மறுத்தால், போராட்டம் தீவிரமடையும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்தப் போராட்டத்தில் பிஎஸ்என்எல்இயு பொதுச் செயலாளர் பாபுராதாகிருஷ்ணன், பொருளாளர் சீனிவாசன், ஒப்பந்த ஊழியர் சங்க தலைவர் பழனிச்சாமி, பொதுச் செயலாளர் வினோத், ஓய்வூதியர் சங்க தலைவர் சி.கே.நரசிம்மன், எஸ்என்ஏ மாநிலச் செயலாளர் வளனரசு, என்எப்டிஇ துணைச் செயலாளர் முரளிதரன், பிஎஸ்என்எல்இயு சென்னை தொலைபேசி பொதுச் செயலாளர் ஸ்ரீதர் சுப்பிரமணியம் உள்ளிட் டோர் பேசினர்.

;