கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துக கட்டுமான சங்க மாநாடு வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 6- சென்னை பெருநகர கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் அம்பத்தூர் பகுதி 4ஆவது மாநாடு தலைவர் கே.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. தொழிற்சங்க மூத்த தலைவர் சி.சுந்தரராஜ் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் ஜி.தனசேகர் வேலை அறிக்கையையும், பொருளாளர் டி.தனசேகரன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். ஆர்.கோபி, எம்.ராபர்ட்ராஜ் (சிபிஎம்), மாவட்ட தலைவர் ஏ.நடராஜன், பொருளாளர் மூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயலாளர் பி.லூர்துசாமி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக ஆர்.கலைச்செல்வி வரவேற்றார். ஜெ.ரவி நன்றி கூறினார். தீர்மானங்கள் கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரிய ஆன்லைன் பதிவை எளிமையாக்க வேண்டும், கட்டுமான தொழிலாளி மனைவியின் மகப்பேறு நிதி ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும், இயற்கையாக மரணம் அடைந்தால் 2 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள்தேர்வு தலைவராக ஜி.தனசேகர், செயலாளராக கே.சீனிவாசன், பொருளாளராக சி.ஆனந்த் உள்ளிட்டு 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு எரிஉலை திட்டத்தை கைவிடுக மாற்றுத்திறனாளிகள் மாநாடு வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 6- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பெரம்பூர் பகுதி 4ஆவது மாநாடு தலைவர் பி.சசி குமார் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.செல்வகுமாரி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் இரா.நடராஜன் வேலை அறிக்கையையும், பொருளாளர் வி.ஜெயந்தி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். 44ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ந.சர்பஜெயதாஸ், எல்.உமா (சிபிஎம்), மத்திய சென்னை மாவட்டப் பொருளாளர் மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் டி.சாரதி, மாவட்ட துணைச் செயலாளர் வி.ரவி, சே.கார்த்திக் (வாலிபர் சங்கம்) ஆகி யோர் வாழ்த்திப் பேசினார். மாவட்ட செய லாளர் எஸ்.ராணி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக டி.குமார் வர வேற்றார். கு.நிர்மலா நன்றி கூறினார். தீர்மானங்கள் மாற்றுத்திறனாளிகன் அனைவருக்கும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் தரை தளத்தில் வீடு வழங்க வேண்டும், வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவித்தொகை கேட்டு பதிவு செய்து ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள்தேர்வு தலைவராக இரா.நடராஜன், செய லாளராக வி.ஜெயந்தி, பொருளாளராக முரளி உள்ளிட்டு 17 பேர் தேர்வு செய்யப் பட்டனர்.
செல்போன் அறிமுகம்
சென்னை, ஜூலை 6- உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டான ஐக்யூஓஓ, அதன் முதன்மை ஐக்யூஓஓ 13 ஸ்மார்ட்போனின் சிறப்பு பதிப்பை - ஏஸ் கிரீன். ஜூலை 12 வெளியிடுகிறது. ஐக்யூஓஓ e-store மற்றும் Amazon.in இல் இந்த செல்போன் விற்பனைக்குக் கிடைக்கும். ஐக்யூஓஓ 13 ஏஸ் கிரீன் வகையின் 12GB+256GB வகையின் விலை ரூ.54,999 மற்றும் 16GB+512GB வகையின் விலை ரூ.59,999 ஆகும். இந்தியாவில் முன்னணியில் இருக்கும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் செயலியைக் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ஐக்யூஓஓ 13, 3 மில்லியனைத் தாண்டிய AnTuTu மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது. ஐக்யூஓஓ 13 ல் 50MP சோனி அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
"உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்
சென்னை, ஜூலை 6- "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நடத்தப்படும் முகா மினை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி யில் வரும் 15 ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடை பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் 15 அன்று மாதவரம் மண்டலத்தில் வார்டு - 25, தண்டையார்பேட்டை மண்டலத்தில் வார்டு - 38, திரு.வி.க நகர் மண்டலத்தில் வார்டு - 76, தேனாம்பேட்டை மண்டலத்தில் வார்டு - 109, வளசரவாக்கம் மண்டலத்தில் வார்டு - 143 அடையாறு மண்டலத்தில் வார்டு - 168 ஆகிய 6 வார்டுகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் தொடங்கி நடை பெறவுள்ளது.
காஞ்சிபுரம் அருகே பெண் அடித்துக்கொலை
காஞ்சிபுரம், ஜூலை 6- காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தாலுகா, காரை கிராமத்தில் செயல்பட்டு வரும் அட்டை கம்பெனியில், ஆண்டி சிறுவள்ளூர் பகுதியைச் சார்ந்த எப்சி மேரி (வயது 41) கடந்த மூன்று நாட்களாக கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மாலை பணி முடிந்து வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடிச்சென்ற நிலையில் அட்டை கம்பெனியின் உள்ளே எப்சி மேரி தலையில் பலத்த காயம் அடைந்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து உடனடி யாக பொன்னேரி கரை காவல் நிலைய போலீ சாருக்கு தகவல் தெரி விக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், எப்சி மேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சி புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட எப்சி மேரிக்கு சுரேஷ் குமார் என்ற கண வரும் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.