tamilnadu

img

தோழர் ஆர்.வெங்கிடுவின் மனைவி காலமானார்

கோயமுத்தூர், ஜன.13- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை  மாவட்ட முன்னாள் செய லாளரும், முன்னாள்  சட்டமன்ற உறுப்பினரு மான ஆர்.வெங்கிடுவின் மனைவியும், கோவை மாநகராட்சி 12 வது வார்டு உறுப்பினரும், சிபிஎம் முன்னாள் மாவட்டச் செயலாளருமான வி.ராமமூர்த்தியின் தாயாரும், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் கே.துரை ராஜின் மாமியாருமான கருப்பாத்தாள் (94) வயது முதிர்வின் காரணமாக சனியன்று காலமானார்.  

இவரது உடல் கோவை, உடையாம்பாளையம் பகுதியில் உள்ள தோழர் ராமமூர்த்தி இல்லத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வுடன் உடையாம்பாளையம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் யு.கே.வெள்ளிங் கிரி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், சிஐடியு, மாதர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.