தேசிய வாக்காளர் தினத்தையொட்டி சென்னை மருத்துவக் கல்லூரி, செவிலியர் பள்ளி, மருந்தியல் கல்லூரி மாணவிகளுக்கான கோலப் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ பரிசு வழங்கி பாராட்டினார். சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.ஜெயந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.