சென்னை:
8 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டு முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கின.தமிழகம் முழுதும் கொரோனாவால் மூடப்பட்டு கிடந்த கல்லூரிகளில், எட்டு மாதங்களுக்குப் பிறகு முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.புதனன்று (டிச.2) கல்லூரிகளில் முதுகலை இரண்டாமாண்டு அறிவியல் ஆய்வக பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது அதன்படி முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் ஆய்வக பயிற்சிக்காக மாணவர்கள் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டனர்.வகுப்புகளுக்கு வந்த மாணவர்கள் முக கவசம் அணிந்திருப்பது உறுதி செய்த பின்னர் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள் ளப்பட்டது. கிருமிநாசினியை கைகளில் தெளித்த பின்னரே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.