tamilnadu

img

பொது விநியோக திட்டத்தை தனித்துறையாக அறிவிக்க கோரி கடலூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

பொது விநியோக திட்டத்தை தனித்துறையாக அறிவிக்க கோரி கடலூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

கடலூர், ஆக. 1- பொது விநியோகத் திட்டத்தை தனித்துறையாக அறிவிக்க கோரி தமிழ்நாடு நியாய விலை கடை ஊழியர்கள் சங்கம் சிஐடியு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொது விநியோகத் திட்ட பொருட்கள் அனைவருக்கும் முழுமையாக ஒதுக்கீடு வழங்கி ஒரே நேரத்தில் அனைவருக்கும் வழங்க வேண்டும் அரசு ஊழியர்களுக்கும் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கும் வித்தியாசம் உள்ள 3 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும். நியாய விலை கடை ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் படி நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதி யம் வழங்க வேண்டும். பல கோடி ரூபாய் செலவில் எடை தராசில் ப்ளூடூத் இணைத்ததை கைவிட்டு பொருட்களை பையில் அடைத்துக் கொடுக்க வேண்டும். பண்டிகை கால சிறப்பு கூடுதல் பணிக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு பத்து ரூபாய் வழங்க வேண்டும், மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி பணிபுரியும் கடையில் எடையாளர் நியமனம் செய்ய வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர் பெறும் அனைத்து சலுகைகளும் நியாயவிலை கடை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக் குழு உறுப்பினர் டி. சுரேஷ் தலைமை தாங்கி னார்.  சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனி வேல் துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் என்.ஆர்.ஆர்.ஜீவானந்தம் கோரிக்கை விளக்கி உரையாற்றினார்.  சிஐடியு மாநில துணைத் தலைவர் பி.கருப்பையன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளர் என்.தேசிங்கு வாழ்த்துரை வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நியாய விலை கடை ஊழியர் சங்கங்களின் துணைத் தலைவர் பி.பெரியசாமி, மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் வி.சுப்ப ராயன், எம்.வேல்முருகன், எஸ்.சுகந்தி, இணை செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.