விற்பனைக்குழு தேர்வில் வெற்றிபெற்ற சிஐடியு நிர்வாகிகள்
சென்னை மாநகராட்சி (பெரம்பூர் ஆர்.கே.நகர்) மண்டலம் 4 விற்பனைக்குழு உறுப்பினருக்கான தேர்தலில் சிஐடியு சார்பில் போட்டியிட்ட க.மோனிஷா (ஆதிதிராவிடர் பிரிவு), மீரான் மைதீன் (சிறுபான்மை பிரிவு), எஸ்.ரீட்டா (மகளிர் பொது பிரிவு), சுகுமார் (மாற்றுத்திறனாளி பிரிவு), சீனிவாசன் (ஓபிசி பிரிவு), கோபாலகிருஷ்ணன் (பொது பிரிவு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
சென்னை மாநகராட்சி மணலி மண்டலம் 2 விற்பனைக்குழு உறுப்பினருக்கான தேர்தலில் சிஐடியு சார்பில் போட்டியிட்ட புகழேந்தி (பொது பிரிவு), கலா (மகளிர் பொது பிரிவு), முத்துக்குமார் (மாற்றுத்திறனாளி பிரிவு), சற்குணராஜ் (ஓபிசி பிரிவு), யாஸ்மின் பேகம் (சிறுபான்மை பிரிவு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.