tamilnadu

img

சிஐடியு மத்தியசென்னை மாவட்டக் குழு உதயம்....

சென்னை:
சிஐடியு மத்திய சென்னை மாவட்டக் குழு உதயமானது.இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மத்தியசென்னை மாவட்ட அமைப்பு மாநாடு திங்களன்று (டிச.28) எழும்பூரில் நடைபெற்றது. இதனையொட்டி மாநாட்டு கொடியை மூத்த தலைவர் ஏ.ஜி.காசிநாதன் ஏற்றினார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து சிந் தனை சிற்பி சிங்காரவேலர் அரங் கில் நடைபெற்ற மாநாட்டிற்கு எம்.சந்திரன் தலைமை தாங்கினார். அஞ்சலி தீர்மானத்தை எஸ்.சந்தானம் வாசித்தார். அமைப்பு அறிக்கையை சி.திருவேட்டை சமர்ப்பித்தார். தென் சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் மாநாட்டை வாழ்த்தி பேசினார். அ.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். முன்னதாக எஸ்.பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.

ஜி.சுகுமாறன் நிறைவுரை
இந்த மாநாட்டில் சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் நிறைவுரையாற்றுகையில்  ரிவசூல், உள்நாட்டில் கலவரம் ஏற்படாமல் தடுப்பது, வெளிநாட்டு அச்சுறுத்தலில் இருந்து நாட்டை பாதுகாப்பது ஆகிய மூன்று பணிகளை மட்டுமே செய்வது; இதர அனைத் தையும் னியார்மயமாக்குவது. தனியாருக்கு தேவையான சலுகைகளை செய்துதருவது என்ற கொள்கையை மத்திய அரசு டைப்பிடிக்கிறது.மத்திய அரசின் மூர்க்கத்தனமான தனியார்மயத்தை எதிர்த்து போராடி வருகின்றனர். இந்த போராட்டங்களின் வாயிலாக நிலக்கரி வயல்கள், பாதுகாப்பு உற்பத்தி ஆலைகள், மின்துறை தனியார்மயம் போன்றவற்றை தொழிலாளி வர்க்கம் தடுத்து நிறுத்தியுள்ளது.

துணை மின் நிலையங்கள் தனியார்மயம்
தமிழகத்தில், 5 துணை மின் நிலையங்கள் தனியார்மயம், மின்வாரியத்தில் 50 சதவீதத் திற்கு மேல் இருந்தால் காலிப் பணியிடங்கள் இருந்தால் தனியார் மூலம் நிரப்பிக் கொள்ளலாம் ஆகிய உத்தரவுகளை தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தால் முறியடித்துள்ளோம். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 94 கோடி ரூபாயை பாக்கியை கொடுக்க வைத்துள்ளோம்.எனவே, தொழிற்சங்கங்களின் கூட்டு இயக்கங்களை வலுப் படுத்தி அதிகரிக்க வேண்டும். அதேசமயம் அமைப்பின் பலத்தை அதிகரிக்க வேண்டும். விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து தொழிலாளர்-விவசாயிகள் ஒற்றுமையை பலப்படுத்துவது, வாலிபர் - மாணவர் அமைப்புகளோடு இணைந்து வேலையின்மைக்கு எதிராக போராடுவது என்று எதிர்கால பணிகள் அமைய வேண்டும்.மத்தியசென்னை மாவட்டத்தில் உள்ள 10 சதவீத மக்களை சிஐடியு உறுப்பினர்களாக மாற்ற வேண்டும். மாவட்டத் திற்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் ஒருங்கிணைப்பு குழுக் களை உருவாக்கி செயலாற்ற வேண்டும். சுரண்டலற்ற சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம் என்றார்.

நிர்வாகிகள்
மாநாட்டில் 21 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப் பட்டது. மாவட்டத் தலைவராக எம். சந்திரன், செயலாளராக சி. திருவேட்டை, பொருளாளராக எஸ். சந்தானம், துணைத் தலைவர்களாக ஏ.ஜி.காசிநாதன், எம்.வி.கிருஷ்ணன், பேபி ஷகிலா, நரேந்திரன், தயாளன், பட்டாபி, மணிமேகலை, ஆறுமுகம், துணைச் செயலாளர்களாக வி. தயானந்தன், அ. கிருஷ்ணமூர்த்தி, பி. சீனிவாசுலு, எஸ். பாலசுப்பிரமணியம், பி. சுந்தரம், அருள்குமார், உதயகுமார், எம். பழனி, ஆர். ராஜாராமன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

;