tamilnadu

img

ரூ.42.45 கோடியில் புனரமைக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.42.45 கோடியில் புனரமைக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

 சென்னை, அக். 24- சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை யின் சார்பில் ரூ.42.45 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று(அக்.24) திறந்து வைத்தார். சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் 58 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட அடையாறு உப்பங் கழியை சீரமைத்து 'தொல் காப்பியப் பூங்கா' உரு வாக்கப்பட்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 2008-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 22.01.2011 அன்று கருணாநிதியால் பொதுமக்களின் பயன் பாட்டுக்காக திறந்து வைக்க ப்பட்டது. கடந்த காலத்தில் முறை யான பராமரிப்பின்றி இருந்த தொல்காப்பியப் பூங்காவை மேம்படுத்த 2021 ஜூலை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கியது. புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மையம், பார் வையாளர் மாடம், நடை பாதை, சிற்றுண்டியகம், புதிய கழிப்பறை, திறந்த வெளி அரங்கம், இணைப்புப் பாலம், கண்காணிப்பு கேம ராக்கள், குழந்தைகளுக் கான விளையாட்டுப் பகுதி போன்ற பணிகள் மேற்கொள் ளப்பட்டன.  சாந்தோம் சாலையில் உயர்மட்ட நடைமேம்பால மும், டாக்டர் டி.ஜி.எஸ். தினக ரன் சாலையின் குறுக்கே மூன்று வழி பெட்டகக் கால் வாயும் அமைக்கப்பட் டுள்ளன. பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள 3.20 கிலோமீட்டர் பாதை அமைக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியப் பூங்கா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாகச் செயல்படுகிறது. மாணவர் களுக்கான பிரத்யேக சுற்றுச்சூழல் கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப் ்பட்டுள்ளது. பூங்காவைப் பார்வையிடும் அனைத்து மாணவர்களுக்கும் ஊட்டச் சத்து மிக்க சிற்றுண்டி வழங் கப்படும். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "முன்னாள் முதல்வர் கரு ணாநிதியால் உருவாக்கப் பட்ட தொல்காப்பியப் பூங்கா வுக்கு மேலும் எழிலூட்டிப் புதுப்பித்திருக்கிறது மாநில அரசு. இத்தகைய பசும் போர்வைகளால் சென் னையைமேலும் அலங்கரிப் போம்!" எனத்தெரிவித் துள்ளார்.

நாள்தோறும் 200 பேர் பார்வையிட அனுமதி பொதுமக்கள்

(அதிகபட்சம் 100 நபர்கள்) திங்கள் முதல் ஞாயிறு பிற்பகல் 2.30 முதல் மாலை 4.30 வரை இணையதள முன்பதிவின் மூலம் பார்வையிடலாம். மாணவர்கள் (அதிகபட்சம் 100 பேர்) காலை 9.30 முதல் நண்பகல் 12.30 வரை பார்வையிடலாம். சென்னை மாநகராட்சி  பள்ளிகள் - செவ்வாய், சனிகிழமை; அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் - வெள்ளி; தனியார் பள்ளிகள் - திங்கள்,  புதன், ஞாயிறு. வியாழன் பராமரிப்பு விடுமுறை. அனைத்து  நாட்களும் காலை 6.30 முதல் 8 வரையும், மாலை 4.30 முதல் 6 வரையும் நடைப்பயிற்சிக்கு அனுமதி உண்டு.