tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் அடையாளங்கள் திருட்டு அதிகரிப்பு


சென்னை,ஏப். 22டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவில் நிதிதொடர்பான சைபர் கிரைம்மற்றும் தனிநபர் அடையாள திருட்டு அதிகரித்து வருகிறது என எஃப்.ஐ.எஸ் பேஸ்அறிக்கை தெரிவித்துள்ளது.2019 ஆம் ஆண்டுஆய்வில் பாதிக்கப்பட்டவர்களில் நிதி மோசடி பேர்வழிகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்து 37 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.கடந்தாண்டு மோசடியால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப்பேர் 27 முதல் 37 வயதுடையவர்கள். கடந்தாண்டு இணைய மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களில் 96 சதவீத நுகர்வோர் மொபைல் செயலிகளுக்கு மாறியிருக்கிறார்கள்.எஃப்.ஐ.எஸ்-ன்5வது வருடாந்திர அறிக்கையானது இந்தியர்கள் டிஜிட்டல் பரிமாற்றங்களை அதிகளவில் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் அதே நேரத்தில் சமூக பொறியியல் மற்றும் மின்னஞ்சல்களில் ஏமாற்று வேலைகள் நடக்க வாய்ப்புகள் அதிகமுள்ள நிலையில் இதில்சுயவிவரங்களை அளிக்கும் நடைமுறைகளில் நாம்செய்யக் கூடிய மற்றும்செய்யக்கூடாத விஷயங்களைப் பற்றி இனியும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. எஃப்.ஐ.எஸ். இந்தியாவின் நிர்வாக இயக்குநரான ராமசாமி வெங்கடாச்சலம் இதுபற்றி கூறும் போது “தற்போதுள்ள டிஜிட்டல் வங்கி அமைப்பில் பாதுகாப்பு மோசடிகளைத் தடுப்பது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இது தொடர்பான கல்வியை அளிப்பதற்காக வங்கிகள் தங்கள் முதலீடுகளை அதிகரிக்க வேண்டியது மிகவும்அவசியம் என்று கூறியுள்ளார். வங்கிகள் வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல்களைக் காப்பது ஆகியவற்றில் கூடுதல் கவனத்தை செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் ஈட்டமுடியும் என்றும் அவர் கூறுகிறார்.


உளவுப்பிரிவு உதவி ஆய்வாளரை தாக்கிய 4 பேர் கைது


சென்னை, ஏப். 22-சென்னை அண்ணா சாலை தர்காவின் சந்தனக்கூடு ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் நடைபெற்றது. சந்தனக் கூடு ஊர்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாகசென்று கொண்டிருக்கும்போது, அங்கு ஒரு கும்பல் மதுபோதையில் சாலையில் தகராறு செய்து கொண்டிருந்ததாம்.இதைப் பார்த்த அங்கிருந்த மதவாத உளவுப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மகபூப் பாட்ஷா (52), அவர்களை கண்டித்துள்ளார். இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறுமுற்றவே மகபூப் பாட்ஷாவைஅந்தக் கும்பல் கற்களாலும், கட்டையாலும் தாக்கிவிட்டு தப்பியோடினர்.இச் சம்பவத்தில் காயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்துஜாம் பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்டதாக ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தஆனந்த் (30), அவரதுகூட்டாளிகள் திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அ.சாதிக் (45), புளியந்தோப்பு டி.வி.கே.நகரைச் சேர்ந்த சா.சதாம்உசேன் (30), கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் பகுதியைச் சேர்ந்த நா.ஜமீல் (27) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

;