tamilnadu

img

சென்னை: பாஜக அலுவலகத்திற்கு சீல் வைப்பு

சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வணிக ரீதியான பயன்பாட்டிற்கு என அந்த இடத்தை வாடகைக்கு வாங்கி, பாஜகவின் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து, அங்கு வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் பாஜக அலுவலகத்தை இன்று பூட்டி சீல் வைத்தனர்.