சென்னை - துபாய் விமான போக்குவரத்து மீண்டும் துவக்கம்
சென்னை,ஏப்.22- துபாயில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கன மழை பெய்ததால் துபாய் நகரம் வெள்ளத்தில் சிக்கி தவித்தது. வரலாறு காணாத மழை காரணமாக துபாய் விமான நிலையம் பாதிப்புக்குள்ளானது. விமான ஓடுதளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து சென்னையில் இருந்து துபாய்க்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் துபாயில் மழை ஓய்ந்ததால் வெள்ளம் வடிந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் ஓடு பாதை கள் சரி செய்யப்பட்டு விமான போக்குவரத்துக்கு தயாரானது. அதன் பிறகு துபாயில் விமான போக்குவரத்து தொடங்கி யது.
இதையடுத்து சென்னையில் இருந்து துபாய்க்கு விமான போக்குவரத்து தொடங்கியது. சென்னையில் இருந்து ஞாயிறன்று (ஏப்.22) காலை துபாய்க்கு விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 267 பயணிகள் பயணம் செய்தனர்.
ஆசிரியையிடம் செயின் பறிப்பு
அம்பத்தூர், ஏப்.21- ஆவடியில் மக்களவைத் தேர்தல் பணி முடிந்து கணவரு டன் இரு சக்கர வாகனத்தில் வந்த ஆசிரியையிடம் செயின் பறித்த மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வரு கின்றனர். ஆவடி அருகே மேலப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல். இவரது மனைவி தீபாலட்சுமி (46).
இவர் பெரிய பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரி யராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தீபாலட்சுமி புழல் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி யில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் பணி முடிந்து கணவர் ஞானவேலுடன் இரு சக்கர வாகனத்தில் இரவு வீட்டுக்கு புறப்பட்டார்.
இவர்கள் ஆவடி, சிடிஎச் சாலை யில் சென்று கொண்டிருக்கும் போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் தீபா லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்து தீபாலட்சுமி ஆவடி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன் கைது
சென்னை, ஏப். 21- மாதவரத்தில் குடிபோதையில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகனை காவல் துறையினர் கைது செய்தனர்.
மாதவரம் தபால் பெட்டி
கண்ணன் நகர் முதல் தெருவில் வாடகை வீட்டில் வசிப்பவர் புஷ்பராஜ் (45). இவரது மனைவி ஜான்சி (40). இவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். ஜான்சியின் தாயார் வசந்தி (65) இவர்களுடன் வசித்து வந்தார். புஷ்பராஜிக்கு குடி பழக்கம் இருந்ததால் வேலை ஏதும் செய்யாமல் வீட்டி லேயே இருத்து வந்துள்ளார்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் குடி போதையில் வீட்டுக்கு வந்த புஷ்ப ராஜ் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை யடுத்து ஜான்சி கோபித்துக் கொண்டு வெளியே சென்று விட்டார். தனது பிள்ளைகளை கவனித்துக் கொண்டிருந்த மாமியார் வசந்தி தனது வீட்டில் வசித்து வருவதை வெறுத்த புஷ்பராஜ் மனைவி வெளியே சென்றதும் போதையில் மாமியாரிடம் தகராறு செய்துள்ளார்.
ஒரு சுட்டத்தில் ஆத்திரத்தில் இருந்த புஷ்பராஜ் திடீ ரென தனது மாமியாரை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி சண்டை யிட்டு கட்டையால் தலையில் தாக்கி யுள்ளார். இதனால் வசந்திக்கு பின் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்த நிலையில், மயக்கமாகி கீழே விழுந்தார்.இரண்டு மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்த ஜான்சி தனது தாயாரின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இது குறித்த புகாரின் பேரில் தகவல் மாதவரம் காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியில் உள்ள சுடுகாடு அருகே தலைமறைவாக இருந்த புஷ்பராஜை ஞாயிற்று க்கிழமை கைது செய்தனர்.