சீத்தாராம் யெச்சூரிக்கு உற்சாக வரவேற்பு
கேரளத்தில் சாலக்குடி தொகுதி எல்.டி.எப் வேட்பாளர் பேராசிரியர். சி ரவீந்திரநாத்தை ஆதரித்து பட்டிமற்றத்தில் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு மக்கள் மற்றும் கட்சியினர் அளித்த வரவேற்பு.
விஜயவாடாவில் சிபிஎம் வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்
ஆந்திரப்பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகிறது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து இந்தியா கூட்டணி சார்பில் களம் காண்கின்றனர். அரக்கு மக்களவைத் தொகுதியிலும் 8 சட்டமன்ற தொகுதியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. விஜயவாடா மத்திய தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சி.எச்.பாபுராவ் பெரும் உற்சாக மக்கள் வெள்ளத்துடன் சென்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். ஆந்திராவில் மே 13 அன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.