tamilnadu

img

114 மருத்துவர்கள் மீதான நடவடிக்கை ரத்து...

சென்னை:
காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 114 மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்துசெய்து மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 அக்டோபர் 25 முதல் 31ஆம் தேதி வரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக 118 மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மருத்துவர்கள் போராட் டத்தில் ஈடுபட்ட தங்கள் மீதான நடவடிக் கையை ரத்துச் செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இது குறித்து நீதிமன்றத் தில் வழக்கு நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் மக்கள் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில், “ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது துறை
ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்துசெய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த இடங்களில் நியமனம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.அவர்களின் கோரிக்கையை ஏற்று 2019 அக்டோபர் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் போராட்டத்தில் கலந்துகொண்டதாக நடவடிக்கை எடுக்கப்பட்ட 114 மருத்துவர்கள் மீதான அனைத்து நடவடிக்கையும் திரும்பப் பெறப்படுகிறது. மேலும் அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த இடங்களிலேயே நியமனம் செய்யப்படுகின்றனர் எனக் கூறியுள்ளார்.

;