மதுரை:
மதுரை “ஆவின் அசத்துகிறது” நாளொன்றுக்கு 2 லட்சத்து 17 லிட்டர் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படுகிறது என மதுரை ஆவின்பொதுமேலாளர் சனிக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள் ளார். ஆனால் அயர்வில் உள்ளதாக
பால் உற்பத்தியாளர்கள் தெரிவிக் கின்றனர்.
ஆவின் பொதுமேலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மதுரை ஆவின் நிர்வாகத்திற்கு 872 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங் கங்கள் உள்ளன. அவற்றில் 17 ஆயிரத்து 748 உறுப்பினர்கள் உள்ளனர். நாளொன்றுக்கு 2 லட்சத்து 17 ஆயிரம்லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 1 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பால் நுகர்வோர்களுக்கு உரிய முறையில் பக்குவப்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது. ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு பத்து நாட்களுக்கு ஒரு முறை பணம்பட்டுவாடா செய்யப்படுகிறது. கால் நடைகளுக்கு மானிய விலையில் மாட்டுத் தீவனம், தாது உப்புக் கலவை வழங்கப்படுகிறது, தவிர பசுந்தீவன புல் வளர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது. மாடுகளுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.தீபாவளிப் பண்டிகையின் போதுரூ.1.5 கோடிக்கு இனிப்புகள் விற்கப் பட்டுள்ளன. மதுரை ஆவினில் மாதாந்திர சராசரி லாபம் சுமார் ஒரு கோடி.தரமான பாலுக்கு நியாயமான விலை வழங்கி பால் உற்பத்தியாளர்களையும் நுகர்வோர்களையும் இரு கண்களாக பாதுகாக்கிறோம் என அறிக்கையில் கூறியுள்ளார்.
கேட்பது 50 சதவீதம் கொடுப்பதோ 25 சதவீதம்
ஆவின் பொது மேலாளரின் அறிக்கை குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மதுரைமாவட்டச் செயலாளர் பி.எஸ்.முத்துப்பாண்டி கூறியதாவது:
“ஆவின் நிர்வாகம் பத்து நாட்களுக்கு ஒரு முறை உற்பத்தியாளர் களுக்கு பணம் தருவதாகக் கூறுகிறது. பால் உற்பத்தியாளர்களின் 25 நாள் பணம் ஆவினில் இருக்கும் போது பத்துநாள் பணத்தை மட்டுமே தருகிறது. இந்த நிலையை மாற்றி ஐந்து நாள் பணத்தை மட்டும் வேண்டுமானால் நிறுத்திக்கொண்டு 20 நாட்களுக்கான பணத்தை வழங்கவேண்டும். மானியவிலையில் பால் உற்பத்தியாளர் களுக்கு மாட்டுத் தீவனம் வழங்குவது உண்மை தான். ஆனால் அதை தேவைக்கேற்ப வழங்குவதில்லை. கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கு மானிய விலையில் தீவனம் வழங்கவில்லை. நவம்பர் மாதம் தான் கிடைத்துள்ளது. அதுவும் 25 சதவீதம் மானியத்தில் வழங்குகிறார்கள். எங்களது கோரிக்கை 50 சதவீத மானியத்தில்வழங்கவேண்டும் என்பது என்றார்.
உற்பத்தியாளர்களை ஏமாற்றிய ஆவின்
மேலும் அவர் கூறுகையில், “சூப்பர்டாக்ஸ் கட்டும் ஆவின், தீபாவளி பண்டிகையையொட்டி லிட்டருக்கு ரூபாய் ஒன்று போனஸாக வழங்கவேண்டும் (லாபத்தில் பங்கீடு) என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம்வலியுறுத்தியது. போராட்டங்களையும் நடத்தியது. ஆனால் மதுரை ஆவின்நிர்வாகமும், பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜியும்இந்த கோரிக்கையை அலட்சியப் படுத்திவிட்டனர். இப்போதும் காலம்கடந்துவிடவில்லை. உற்பத்தியாளர் களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ஒருரூபாய் போனசாக வழங்க வேண்டும்.ஆவினையும், மக்களையும் காப்பாற் றும் பால் உற்பத்தியாளர்களின் வயிற்றில் பால் வார்க்க மறுப்பது என்னநியாயம்? ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறை அமைச்சரும் 50 சதவீத மானியத்தில் மாட்டுத்தீவனம் வழங்கவேண்டும். போனசை உடனடியாக வழங்கவேண்டும். அப்போதுதான் “அசத்தும் ஆவின்” என்ற முழக்கம் உண்மையாகும்” என்றார்.ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ளஅறிக்கை மற்றும் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் குறித்து பொது மேலாளரை அலைபேசியில் தொடர்பு கொண்டபோது “ஆவின் பால் பருகுங்கள்” என்ற பாடல் மட் டுமே ஒலித்தது. ஆனால் தொடர்பு கொள்ள இயலவில்லை. பால் உற் பத்தியாளர்களுக்கும் இது தான் நிலைஎன்பதுதான் வேதனை.
நமது நிருபர்