tamilnadu

img

மெரினா கடற்கரை கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு... தமிழக முதலமைச்சர் தலையிடக் கோரிக்கை....

சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் உணவுப்பொருட் கள், குளிர்பானங்கள் உள்ளிட்ட சிறு வியாபாரம் செய்வதற்கான கடைகள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்ய விண்ணப்பங்களை வரவேற்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இதற்காக விண் ணப்பிக்க    இம்மாதம் 26ஆம் தேதி  கடைசி நாளாகும்.

இப்படி வியாபாரம் செய் வதற்கான இட ஒதுக்கீட்டில் 5 விழுக்காட்டை  மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காக, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 37-ஊ - ன்படி வழங்க வேண் டும்.  ஆனால், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.எனவே, மெரினா கடற் கரையில் வியாபாரம் செய் வதற்கான இட ஒதுக்கீட்டில் 5விழுக்காட்டை  மாற்றுத் திறனாளிகளின் சட்டப்பூர்வ உரிமைகளின்படி சென்னை மாநகராட்சி வழங்க உரிய 
உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக அதன் தலைவர் பா.ஜான்ஸிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

;