அண்ணாமலைப் பல்கலை. புதிய துணைவேந்தர் குழு உறுப்பினர் பொறுப்பேற்பு
சிதம்பரம், ஆக.18- அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் குழு உறுப்பினர் முனைவர். எஸ்.அறிவுடைநம்பி பொறுப்பேற்றார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் குழு உறுப்பினராக இருந்த டி.அருட்செல்வி மாற்றம் செய்யப் பட்டுள்ளார். புதிய துணைவேந்தர் குழு உறுப்பினராக வேளாண்மைப் புலத்தைச் சேர்ந்த பூச்சியியல் துறைப் பேரா சிரியரும், உள்தர கட்டுப்பாட்டு உறுதி மைய இயக்குநருமான முனைவர். எஸ்.அறிவுடைநம்பி ஆட்சிக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு நிய மிக்கப்பட்டுள்ளார். புதிய உறுப்பினர் முனைவர். எஸ்.அறிவுடைநம்பி துணைவேந்தர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பதிவாளர் எம்.பிரகாஷ், முன்னாள் துணைவேந்தர் உறுப்பினர் குழு உறுப்பினர் அருட்செல்வி, புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேரா சிரியர்கள், துணைவேந்தரின் நேர்முக செயலாளர், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் ஊழியர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.