tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘மனம் திருந்தி வந்துவிட்டோம்’
பாஜக அடித்த அந்தர் பல்டி

கோயம்புத்தூர், ஏப்.12- “எங்களை மதிப்  பதே இல்லை, எனவே அண்ணாமலைக்கு பாமக வேலை செய்  யாது, மன வருத்தத்  துடன் வெளியேறு கிறோம்” என வெள்ளி யன்று காலையில் கோவை பாமகவினர்  அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

கூட்டணி தர்மம் முக்கியம் தான்  அதைவிட சுயமரியாதை முக்கியம்.  தேர்தல் பணிகளில் இருந்து மௌனமாய்  வெளியேறுகிறோம் பாமக மாவட்டச் செயலாளர் கோவை ராஜ், மகளிரணி செயலாளர் சுதா ஆகியோர் அறிக்கை யில் குறிப்பிட்டிருந்தனர். 

இது கோவையில் பரபரப்பை ஏற்  படுத்தியது. பாஜகவுக்கு நெருக்கடியாக  மாறியது. ஆனால், இடைப்பட்ட நேரத் தில் என்ன பேரம் பேசப்பட்டதோ, மாலை யிலேயே, இரண்டாவது அறிக்கையை வெளியிட்ட பாமகவினர், “காலையில் வந்த அறிக்கை பொய்யானது; அண்ணா மலைக்கு வேலை செய்வோம்” அப்  படியே அந்தர் பல்டி அளித்துள்ளனர்.

திரைக் கலைஞர் அருள்மணி காலமானார்
சென்னை, ஏப்.12- தமிழில் பல் வேறு திரைப் படங்களில் குணச்  சித்திர வேடங்  களில் நடித்து பிரபலமானவர் அருள்மணி (65).  அழகி, தென்  றல், பொன்னு மணி, தர்மசீலன், சிங்கம், லிங்கா உள்  ளிட்ட பல்வேறு படங்களில் அருள்மணி நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி, அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக தேர்தல் பிரச்சார பணியில் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், சென்னை திரும்பி ஓய்வில் இருந்து வந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பல னின்றி அவர் உயிரிழந்தார். இதை யடுத்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல், பொதுமக்களின் அஞ்ச லிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப் பட்டது.

சிபிஎம் தலைவர்களின் இன்றைய பிரச்சாரம்

சீத்தாராம் யெச்சூரி
பொதுச்செயலாளர்   
மதுரை

கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்   
குறிஞ்சிப்பாடி, 
கடலூர்

ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
விழுப்புரம்

அ.சவுந்தரராசன்
மூத்த தலைவர்
நாகப்பட்டினம்

தமிழகத்தில் 70 விழுக்காடு பூத் ‘சிலிப்’ விநியோகம்
சென்னை, ஏப்.12- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  சென்னை தலை மைச் செயலகத்தில் வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப் போது, “தமிழ்நாட்டிலுள்ள 6.32 கோடி  வாக்காளர்களில் இதுவரை 4.36 கோடி  பேருக்கு அதாவது 70 விழுக்காடு வாக்கா ளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள் ளது” என்று தெரிவித்தார். பெரும்பாக் கத்தில் 30,000 வாக்காளர் பெயர் நீக்கப்  பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அதி காரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், மகளிர் உரிமைத்  தொகை ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு எந்தவித தடையும் இல்லை. தொடர்ச்சி யாக செயல்படுத்தி வரும் திட்டங்கள் தொடரலாம் என்று தேர்தல் ஆணைய விதியில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

10 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது!
சென்னை, ஏப்.12- தமிழ்நாட்டில் பத்  தாம் வகுப்பு பொதுத்  தேர்வு ஏப்ரல் 8 அன்று  முடிந்தது. சுமார் 9.10 லட்சம் மாண வர்கள் இந்த தேர்வை  எழுதினர். இந்நிலை யில், விடைத்தாள் திருத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை (ஏப்.12) தொடங்கியது. ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான வழிகாட்டுதல்களை அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்கியுள்ளது.