சென்னை, ஜூன் 21 சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க கூடுதலாக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள் ளார். தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளியன்று ( ஜூன் 21) பல்வேறு துறை அதிகாரி களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. குடிநீர் பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும் படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது. சென்னைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகள் வறண்ட தால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையை போக்க ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வர 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது எனத் தெரி வித்தார்.
இந்நிலையில், சென்னை குடிநீர் பிரச்சனையை சமா ளிக்க கூடுதலாக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முத லமைச்சர் எடப்பாடி பழனி சாமி உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சிகள், பேரூ ராட்சிகள், ஊரகப் பகுதி கள் மூலமாக குடிநீர் பிரச்ச னைக்கு தீர்வுகாண நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம் 65 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பருவமழை பொய்த்த தால் சென்னைக்கு நீராதார மாக உள்ள 4 ஏரிகளும் வறண்ட நிலையிலேயே உள்ளன என்றும், நிலத்தடி நீரும் குறைந்துவிட்டதாக அவர் கூறினார். சென்னை யின் குடிநீர் தேவையை நிறைவுசெய்ய எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகளை யும் அவர் பட்டியலிட்டார்.
கேரளா 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தருவதாகக் கூறியதை வரவேற்பதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், தினந்தோறும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தரமுடியுமா என கேரள அரசைக் கேட்க உள்ளதாக கூறினார். முத லமைச்சர் மற்றும் அமைச்சர் வீடுகளுக்கு தினந்தோறும் 2 லாரி தண்ணீர் விநியோ கிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையும் எடப்பாடி பழனிசாமி மறுத்தார். உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்த பிறகு, கர்நாடகத்திடம் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை எனவும் முதலமைச்சர் தெரி வித்தார். பள்ளிகளுக்கு தண்ணீர் இல்லை, விடுதி களுக்கு தண்ணீர் இல்லை என்று வெளியான செய்தி கள் அனைத்தும் தவ றானவை குறிப்பிட்ட அவர், தண்ணீரை அனைவரும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.