புழலில் அம்பேத்கர் சிலை சேதம்
சென்னை, அக்.3- மாதவரம் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் புழல் கேம்ப் சாலை சந்திப்பு அருகே சுமார் 60 வரு டங்களுக்கு முன்பு டாக்டர் அம்பேத்கர் சிலை நிறு வப்பட்டது. மிகவும் பழமை வாய்ந்த டாக்டர் அம்பேத்க ரின் முழு உருவம் பொறிக்கப்பட்ட இந்த சிலை யானது, தமிழகத்தில் முதலாவதாகவும் இந்தியா விலேயே இரண்டாவதாக வும் இடம் பெற்றுள்ளதால் இந்த சிலை மிகவும் புகழ் பெற்றதாகும். அவரது பிறந்த நாள், நினைவு நாளில் அனைத்து தரப்பி னரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இந்நிலையில் சிலை யின் முகம், காது மற்றும் கண் கண்ணாடி பகுதிகள் கல்லால் அடித்து சேதப் படுத்தி உடைகப்பட்டிருப்ப தைக் கண்டு அதிர்ச்சிய டைந்தனர். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவிய தால் பொதுமக்கள் திரண்ட னர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து கொளத்தூர் காவல் துறை யினர் விசாரணை நடத்தி னர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வரு கின்றனர். இது போன்ற சம்பவம் இனியும் நடை பெறாத வண்ணம் அம்பேர் கர் சிலையை சுற்றி இரும்பு கம்பிகளால் ஆன கூண்டு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
