tamilnadu

img

அதிமுக-பாஜகவின் ‘பி’ டீம்தான் 3வது அணி.... சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்....

சென்னை:
அதிமுக-பாஜகவின் பி டீம்தான் 3வது அணி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் வியாழனன்று (டிச.17) சென்னையில் நடைபெற்றது. இதனையொட்டி கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற தேர்தல் பணி தொடர்பாக திட்டமிடல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

தில்லி விவசாயிகள் போராட்டத்திற்குதீர்வு காண்பதற்கு பதிலாக, சிதைக்கவும், மோதலை உருவாக்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும் சதி திட்டம் வகுத்துள்ளனர். 3 வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டம் ஆகியவற்றை திரும்ப பெறாமல் பேச்சுவார்த்தை என்ற பெயரால் அரசு இழுத்தடித்து வருவதுசரியல்ல.விவசாயிகள் கொந்தளித்து போராடி வரும் நிலையில் அந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக முதலமைச்சர் கூறுவது, விவசாயிகளை கேவலப்படுத்துவது போன்று உள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

நிவாரணம்
வெள்ளச் சேதம் பெருமளவு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு அடுத்தகட்ட நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை. பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கவில்லை. மாநிலஅரசு 100 ரூபாய் நிவாரணம் கேட்டால்மத்திய அரசு 10 ரூபாய் கூட தருவதில்லை. எந்தகாலத்திலும் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள மாநில அரசு கேட்கும் தொகை மத்திய அரசு ஈடுசெய்வதில்லை.

ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி விலகல்
அதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதிமுக ஆட்சியின் ஊழலோடு ஒத்துபோக முடியாமல் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். உள்ளாட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் அதிகாரங்களை வழங்காமல் உள்ளனர். ஆளும் கட்சி, அதிகாரிகளை வைத்து இப்போதும் நிர்வாகம் நடத்திக் கொண்டு இருக்கிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் கூட உள்ளாட்சிகளுக்கு நிதியை கொடுக்காமல், மக்கள் பிரதிநிதிகளை நெருக்கடிக்குள்ளாக்கி உள்ளது.

செம்மொழி ஆய்வு பல்கலைக் கழகம்
இந்தியை மத்திய அரசு தொடர்ந்து திணித்து வருகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க செம்மொழி ஆய்வு நிறுவனத்தை மூடிவிட்டு, மைசூர் பல்கலைக் கழகத் தோடு இணைப்பது மோசமான நடவடிக்கை. சமஸ்கிருதத்தை சில ஆயிரம் பேர்தான் பேசுகின்றனர். அந்த மொழிக்கு 10க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் உள்ளன. பல ஆய்வு நிறுவனங்கள் உள்ளன. எனவே, வளமையான தமிழுக்கு உள்ள ஒரேஒரு ஆய்வு நிறுவனமான செம்மொழி ஆய்வு நிறுவனத்தை பல்கலைக் கழகமாக மாற்ற வேண்டும். மாறாக, மைசூர் பல்கலைக் கழகத்தோடு இணைத்து ஒரு துறையாக மாற்றுவது, தமிழ் மொழி மீது பாஜகவினருக்கு உள்ள காழ்ப்புணர்வையே காட்டுகிறது.

சென்னை:
மத்திய தொகுப்பிற்கு மாநில அரசுகள் வழங்கும் மருத்துவ மாணவர்சேர்க்கை இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தொடர்பான வழக்குநீதிமன்றத்தில் உள்ளது. மத்திய தொகுப்பிற்கான இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுகிறது. காவல்நிலையச் சாவுகள் தொடர்கின்றன. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, தலித்மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இவைகுறித்தெல்லாம் விவாதித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள், போராட்டங்கள் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ச்சி 3ம் பக்கம்...

 

;