tamilnadu

img

அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் தோற்கடிக்கப்படும்.... சென்னை ஆர்ப்பாட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு...

சென்னை:
விவசாயத்தையும், கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வை நாசமாக்கும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், தில்லியில் 13 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்க்கட்சிகள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  டிசம்பர் 8 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:விவசாயிகளுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் மோடி அரசு மூன்று வேளாண் சட்டங்களை அவசர அவசரமாக ஜனாதிபதியிடம் கையெழுத்து பெற்று நிறைவேற்றியுள்ளது. செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆட்சேபணைகளை மீறி கொரோனா பொதுமுடக்க காலத்தில்  அதிமுகஆதரவோடு சட்டமாக நிறைவேற்றினார்கள். கொரோனா உயிர்க்கொல்லியை விட இந்த வேளாண் சட்டம் மோசமானது என்று விவசாயிகள் தங்கள் உயிரை பணயம் வைத்து  போராடிக் கொண்டிருக்கிறார்கள். 1990ஆம் ஆண்டு தமிழகத்தில் இலவச மின்சார திட்டதை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.விவசாயி என்று கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி வேளாண் சட்டத்தில் உள்ள ஒப்பந்த விவசாயத்தை எப்படி ஆதரிக்கிறார் என்று தெரியவில்லை. கடந்த25 ஆண்டுகளாக ஒப்பந்த கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிப்புக்கு ஆளானது நாடேஅறியும். இந்திய கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய ரூ.15 ஆயிரம் கோடி நிலுவைத்தொகைஎன்னாச்சு?.

ஒழுங்குமுறை சந்தையை நாசம் செய்யும் மோடி அரசு, அதானி, அம்பானி உள்ளிட்டகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயிகளின் நலன்களை காவு கொடுத்துவிட்டது. அகில இந்திய அளவில் பாஜக கூட்டணிக் கட்சிகள் கூட இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றன. மோடி, எடப்பாடி பழனிசாமி கூட்டணி தமிழகத்தில் தோற்கடிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் திமுக மாவட்டச்செயலாளர் பி.கே.சேகர் பாபு, சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் ஜி.செல்வா,  மூ.வீரபாண்டி யன், மு.சம்பத் (சிபிஐ), சட்டமன்ற உறுப்பினர்கள் ப.ரங்காநாதன், தாயகம் கவி, ரவிச்சந்திரன், சிவக்குமார் (எஸ்யுசிஐ), சிவ.ராஜசேகரன் (காங்கிரஸ்) உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் பிரநிதிகள் பங்கேற்றனர்.

;