tamilnadu

img

சோழவரம் அரசு பள்ளியில் ரூ. 1.46 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை

சோழவரம் அரசு பள்ளியில் ரூ. 1.46 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை  

வேலூர், செப்.21- வேலூர் மாவட்டம் முழுவதும் 16 பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்ட ரூ.19 கோடி நிதி பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், சோழவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.46 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலெட்சுமி தலைமை வகிக்க, அணை க்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டார். இதில் கணியம்பாடி ஒன்றியக்குழு துணைத் தலைவர் கஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் லதா ஜெய சீலன், சோழவரம் ஊராட்சி மன்றத் தலைவர் அமுதா ஜெயபால், பள்ளியின் தலைமையாசிரியர் தனஞ்செழியன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக பள்ளியில் என்சிசி அலுவலர் சூரியகுமார் தலைமையிலான தேசிய மாணவர் படையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி  வைத்து கொடியேற்றினார்.