சென்னை, ஆக. 22 - ஆவினில் அஸ்வகந்தா, மஞ்சள் மிளகு பால் போன்ற மூலிகை பால்களை புதிதாக அறி முகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக பால்வளத்து றை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம், ஆவின் இல்லத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆவினில் தினசரி 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் அஸ்வகந்தா பால், மஞ்சள் மிளகு பால் போன்ற மூலிகை பால் வகைகளையும், சுக்கு மல்லி காபி போன்ற பொருட்களையும் புதிதாக அறி முகம் செய்ய ஆலோசனைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன” என்றார். கடந்த ஆண்டு போல் இல்லாமல் நிகழாண்டில் பண்டிகை நாட்களில் மக்களுக்கு தேவையான பொருட்கள் அனை த்தையும் தடையின்றி விநியோகம் செய்ய ஆவின் நிறுவனம் தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ரேசன் கடைகளில் பால், உபபொருட்கள்!
தமிழ்நாட்டில் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 524 கோடி மதிப்பில் ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள் ளன. விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் கடந்த சில மாதங்களாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகளை மொத்த விற்பனையாளர்களாக நியமித்துஇ அவர்களின் மூலம் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரு கின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் ஆவின் பொருட்கள் விற்பனை சுமார் 20 விழுக்காடு உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஆவின் நிர்வாகம் பால், தயிர், நெய், வெண்ணெய், பன்னீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் உபபொருட்கள் ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் பொது மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் ஆவின் நிறுவனம் தனது பால் உப பொருட்களை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யத் திட்ட மிட்டுள்ளது.