சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!
சென்னை, மே 18- சென்னை திருவான்மியூர்- தரமணி சாலையில் சனிக்கிழமையன்று வாக னங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதற்கிடையே, மெட்ரோ ரயில் பணி களால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்த விளக்கத்தில்,சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்திற்கும் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விபத்து நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தான் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் திருவான்மியூர்- தர மணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் தீவிர மாக நடைபெற்று வருகிறது.