சென்னையில் ரூ.301 கோடியில் உலகளாவிய விளையாட்டு நகரம்!
சென்னை,ஜூலை 3- சென்னை பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர்) அடுத்த சில ஆண்டு களில் விளையாட்டு நகரமாக மாற உள்ளது. ரூ.301 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் உரு வாக இருக்கிறது. இந்த திட்டம் 3 மாதங்க ளில் தொடங்க உள்ளது. விளையாட்டு வசதிகளுடன், சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்கும் வகையில் இது அமை யும். தமிழ்நாடு அரசின் இந்த பெரிய திட்டம், வெள்ளத்தை குறைக்கவும், சிறந்த விளையாட்டு வீரர்களை உரு வாக்கவும் உதவும். விளையாட்டு ஆணையம் 2023-ல் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், 127.44 ஏக்கரில் உருவாகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) மற்றும் நீர்வளத் துறை இணைந்து இதை செயல்படுத்துகின்றன. முதல் கட்டமாக 76.44 ஏக்கரில் கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், நீச்சல், படகு சவாரி, ஸ்கேட்போர்டிங், சைக்கிள் விளை யாட்டுகளுக்கான இடங்கள் இருக்கும். உள் விளையாட்டு அரங்கம், வீரர்கள் தங்கும் விடுதிகள், மழைநீர் வடிகால், சாலைகள் மற்றும் புல்வெளிகள் போன்ற வசதிகளும் இருக்கும். 13 மீட்டர் அகலத்தில், 1 கிலோமீட்டர் நீளத்தில் படகு சவாரி செய்யும் வசதி ஏற்படுத்தப்படும். விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத் ரெட்டி கூறுகையில், “இந்தியாவி லேயே இது முதல் முறை. விளை யாட்டு வளாகத்தில் தண்ணீர் விளை யாட்டு வசதியும் உள்ளது” என்றார். மேலும், “இரண்டாவது மற்றும் மூன்றா வது கட்டங்களில் உள் மற்றும் வெளிப் புற விளையாட்டு அரங்கங்கள் போன்ற கூடுதல் விளையாட்டு வசதிகள் சேர்க்க ப்படும்” என்றும் அவர் கூறினார். இந்த திட்டத்தில் வெள்ளத்தை தடுக்கும் முறையும் உள்ளது. நீர்வளத் துறை இதை கவனிக்கிறது. அந்த பகுதி யில் உள்ள ஆறு குளங்கள் ஆழப்படுத் தப்பட்டு, 16.23 மில்லியன் கன அடி யிலிருந்து 96.38 ஆக கொள்ளளவு அதி கரிக்கப்படும். குளங்களில் இருந்து எடுக்கப்படும் மண், நிலத்தை சமன் செய்ய பயன்படுத்தப்படும். இதனால் சுமார் ரூ.6 கோடி மிச்சமாகும் என்று அதி காரிகள் தெரிவித்தனர். மேலும், 42 ஏக்கரில் புதிய குளம் உரு வாக்கப்படும். இதில் 20 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமிக்க முடியும். இது மழைக்கா லங்களில் வெள்ளத்தை கட்டுப் படுத்தும். இதனால் நாவலூர், செம் மஞ்சேரி மற்றும் டிஎல்எப் கார்டன் சிட்டி போன்ற பகுதிகள் பாதுகாக்கப்படும். வெள்ள மேலாண்மை திட்டத்தில் 4.1 கி.மீ சுற்றளவில் மண் வடிகால்கள் மற்றும் கான்கிரீட் கால்வாய் அமைக்க ப்படும். இது அதிகப்படியான நீரை பக்கிங்காம் கால்வாய் வழியாக பள்ளி க்கரணை சதுப்பு நிலத்திற்கு அனுப்பும். நிறுவப்படும் சாலைகள் நீர்வளத்துறையின் கீழ் பாலாறு பிரிவு செயற்பொறியாளர் அருண் மொழி கூறுகையில், “நீல-பச்சை தாழ்வாரமாக இதை உருவாக்க சாத்தி யக்கூறு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது” என்றார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் இந்த திட்டத்தை மேற்பார்வை செய்கிறது. மேலும், விளையாட்டு நக ரத்திற்கு செல்ல சாலைகள் அமைக்கப் பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைந்து மெட்ரோ இணைப்பு ஏற்படுத்தவும் திட்டம் தயாராகி வருகிறது.