ஆவின் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க முடிவு
சென்னை,ஜன.30- ஆவின் பால் பொருட்கள் விற்பனையை மாதம் 50 கோடி ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பால் பொருட்கள் விற்பனை வாயிலாக மாதந் தோறும் 35 முதல் 40 கோடி ரூபாய் வரை ஆவினுக்கு வருவாய் கிடைத்து வரு கிறது.
பனிக்காலம் முடிந்து வெயில் தலைகாட்ட துவங் கியுள்ள நிலையில் தயிர், லஸ்ஸி, நறுமண பால், ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்ட வற்றின் விற்பனை அதி கரிக்க தொடங்கியது. எனவே ஆவின் பால் பொருட்கள் உற்பத்தியை பெருக்கி பால் பொருட் களின் மாத விற்பனையை 50 கோடி ரூபாயாக அதிக ரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தங்கம் விலை ரூ.120 உயர்வு
சென்னை,ஜன.30- தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் முதல் ஏற்ற இறக்கத்துடன் காணப் படுகிறது. திங்களன்று, சவர னுக்கு ரூ.40 உயர்ந்தது. இந்த நிலையில் செவ்வாய்க் கிழமை (ஜன.30) ரூ.120 உயர்ந்து, 46,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.