சிதம்பரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் 89ஆம் ஆண்டு பேரவை கூட்டம்
சிதம்பரம், ஜூலை 25- சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் 88 மற்றும் 89ஆம் ஆண்டு பேரவை கூட்டம் மேலாண்மை இயக்கு னர் சிவகுருநாதன் தலை மையில் நடைபெற்றது. வாக்கூர் கூட்டுறவு சங்க செயலாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.ஜி ரவிச்சந்திரன் ஆண்ட றிக்கை வாசித்தார். ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க செயலாளர்கள் சுரேஷ், ரத்தினசபாபதி உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டு கூட்டுறவு சங்க நடவடிக்கை களை மேன்மைபடுத்துவது குறித்து பேசினர். அதனைத் தொடர்ந்து சங்க உறுப்பினர்கள் 15 பேருக்கு ஈவு பங்கு தொகை வழங்கப்பட்டது. சங்கத்தின் அ பிரிவு உறுப்பினர்களின் குறைந்த பட்ச பங்குத் தொகையை ரூ 100இல் இருந்து ரூ 1000 ஆக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்வது. உளுந்து பதனிடம் ஆலையின் உற்பத்தித்திறனை அதி கரிக்கும் பொருட்டு நட வடிக்கை மேற்கொள்ளுதல், சங்க வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழ்நாடு அரசு நியவிலை கடை பணி யாளர் சங்க மாநிலப் பொதுசெயலாளர் ஜெய சந்திரராஜா, சங்க நிர்வாகி கள் கூட்டுறவு விற்பனை சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.