ஈரோடு, டிச.6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் சார்பில் சட்டமேதை அம்பேத் கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 67 ஆவது நினைவு தினம் நாடு முழுவ தும் புதனன்று அனுசரிக்கப்பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர். ரகுராமன் தலைமையில் மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் மா.அண்ணாதுரை, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. பரமசிவம், ஆர்.கோமதி, எஸ்.சுப்ரமணி யன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எச். ஸ்ரீராம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.சுந்தரராஜன், பா.லலிதா, பி.ராஜா மற்றும் வி.சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு தாலுகா கமிட்டி சார்பில் என்.பாலசுப்பிரமணி யம், என்.பழனிசாமி ஆகியோர் தலை மையில் இரண்டு இடங்களில் அம் பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது. பவானியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி தலைமையில் படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்தியூர் ரவுண்டானா மற்றும் கூடுமைனூர் ஆகிய இடங்களிலும் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கோபி வட்டாட்சி யர் அலுவலக வளாகத்தில் ஏ.எம். முனுசாமி, கே.சி.ரங்கசாமி, ஜி.ஏ.துரை சாமி, மாரிமுத்து மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சத்தியமங்கலம் அலு வலகத்தில் கே.எம்.விஜயகுமார் தலை மையிலும் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஈரோடு டெலிபோன் பவனில் நடை பெற்ற நினைவு தின நிகழ்ச்சிக்கு பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் ஆர்.தம்பிக்கலையான் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பாலு, ஓய்வூதியர் சங்க மாவட்டச் பொருளாளர் வி.மணியன், ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலை வர் என்.குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஒப்பந்த ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் கே. பழனிசாமி நன்றி கூறினார்.
கோவை
கோவை கணபதி அடுத்த காமராஜ புரத்தில் அண்ணல் அம்பேத்கரின் 63 ஆவது நினைவு நாள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதனன்று அனுசரிக் கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத்தலை வர் யு.கே சிவஞானம் தலைமை ஏற்றார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் சி.பத்ம நாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் மகேஷ்வரன் மற்றும் தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, சிபிஎம் வடக்கு நகரக்குழு உறுப்பினர்கள் பாலன், ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
சேலம்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில், சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லூரி அருகே உள்ள அண் ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, அம்பேத்கரின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை. சண்முகராஜா, தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டத் தலைவர் ஆர்.குழந்தை வேல், சிபிஎம் வடக்கு மாநகரச் செயலா ளர் என்.பிரவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், இந் திய மாணவர் சங்கம் சார்பாக அம்பேத் கர் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் அரசு கல்லூரி கிளைத் தலைவர் கீர்த்திவாசன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட துணைச்செயலாளர் டார்வின், மாவட்டக் குழு உறுப்பினர் அவந்திகா, அபிராமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், கிளைச் செயலாளர் கோகுல் நன்றி கூறினார். மேட்டூர் பகுதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தருமபுரி
தருமபுரி மாவட்டம், அரூர் ரவுண் டானா அருகே உள்ள டாக்டர் அம்பேத் கர் உருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி யினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் பி.குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்டக்குழு உறுப் பினர்கள் எஸ்.கே.கோவிந்தன், இ.கே.முருகன், பி.சங்கு, பி.வி.மாது உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, இந்திய மாணவர் சங்கத்தினர் ராசிபுரத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் சரவணன், மாவட்டத் தலைவர் தங்கராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நிசார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பரணிதரன், சதீஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்ட னர். பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதி யில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார் பில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சியில், மதிமுக, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண் டனர்.