tamilnadu

img

625 நபர்கள் பணிக்கு தேர்வு  ராணிப்பேட்டை

625 நபர்கள் பணிக்கு தேர்வு  ராணிப்பேட்டை

, ஜூலை 20 -  ராணிப்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (ஆர்ஐடி) சனிக்கிழமை (ஜூலை19) மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்,  இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 90 தொழில் நிறுவனங்கள், 6 திறன் பயிற்சி  வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டது. இதில் 982  ஆண் வேலை நாடுநர்கள், 638 பெண் வேலை நாடுநர்கள் என மொத்தம் 1620 வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். 625 நபர்கள் உடனடி வேலை பணிக்கு தேர்வாகினர். 21 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா வழங்கினார்.