தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி,
- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம்.
- ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இணை செயலாளராக ரத்னா நியமனம்.
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராக விஜய கார்த்திகேயன் நியமனம்.
- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமனம்.
- சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் நியமனம். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.