tamilnadu

27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்

புதுதில்லி, மார்ச் 16- தமிழ்நாட்டில் தேர்தல் செலவுக் கணக்  கைத் தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்  களை தகுதி நீக்கம் செய்து இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளி யிட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பா ளர்கள் வேட்பு மனுத் தாக்கல் முதல்  வாக்கு எண்ணிக்கை தினம் வரையிலும்  செலவு செய்யும் தொகை உள்ளிட்ட தேர்  தல் செலவுக் கணக்கை முறைப்படி தாக்  கல் செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதித்  துவச் சட்டத்தின்படி இதனை அனைத்து  வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும்.

இதற்காக தேர்தல் முடிவு அறிவிக் கப்பட்ட 30 நாட்கள் அவகாசம் வழங் கப்படும். அதற்குள் தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் அந்த வேட்பாளர்கள் அதன்பிறகு தேர்த லில் போட்டியிடத் தடை விதிக்கப்படும். அதன்படி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு, இந்தியத் தேர்தல் ஆணை யம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பா ளர்கள் பட்டியலை அனுப்பி உள்ளது. 

இதில், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் மற்றும் 2021-ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்ட 26 பேர்கள் என மொத்தம் 27 பேரின் பெயர் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக் கம் செய்யப்பட்டுள்ள இந்த 27 பேரும்  அடுத்த மூன்றாண்டுகளுக்கு எந்த வொரு தேர்தலிலும் போட்டியிட முடி யாது என்பது குறிப்பிடத்தக்கது.