tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

மருத்துவர் வீட்டில்  158 சவரன் நகை கொள்ளை

கடலூர், ஜூலை 25- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புது பிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்த ராஜா. இவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்து வராக பணிபுரிந்து வருகிறார்.  ராஜா பணிக்கு சென்று விட்டு வெள்ளி யன்று  வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த  ராஜா வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த 158 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.  ராஜாவின் மனைவி ஆர்த்தியும் மருத்து வராக பணிபுரிந்து வருகிறார். கொள்ளை சம்பவம் குறித்து ராஜா காடாம் புலியூர் காவல் நிலை யத்தில்  புகார் அளித்து ள்ளார். கொள்ளை நடந்த வீட்டில் கட லூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக் குமார் நேரில் வந்து விசா ரணை மேற்கொண்டார்.

சுகாதாரமற்ற உணவுக் கடைகள் அகற்றம்

அண்ணாநகர், ஜூலை 25-  கோயம்பேடு மார்க்கெட் அருகே மழைநீர் கால்வாய் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால், சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன் அருகில், தள்ளுவண்டி கடை உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்தன. இது தொடர்பாக, அங்காடி நிர்வாக முதன்மை அலு வலர் இந்துமதிக்கு வந்த புகாரின் அடிப்படையில் அவர் நேரில் ஆய்வு செய்து  கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அதன்பேரில், அங்காடி நிர்வாக ஊழியர்கள் அங்கி ருந்த தள்ளுவண்டி உண வகங்களை அப்புறப்படுத்தி னர்.