tamilnadu

145 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி

சென்னை,ஏப்.2-சென்னை மணலியில் உள்ள உரத்தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் அமைத்ததால் 145 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்துள்ளது.இதுகுறித்து விவரம் வருமாறு,சென்னை மணலியில் உள்ள பொதுத்துறை நிறுவனமானஉரத்தொழிற்சாலையில் (எம்எப்எல்) விவசாயத்திற்கு தேவையான யூரியா, என்பி.கே, காம்ப்ளக்ஸ் உள்ளிட்டஉரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் இயந்திரங்கள் பராமரிப்புக்காக தற்காலிகமாக பணி நிறுத்தம்(ஷட்டவுன்) செய்யப்பட்டுள்ளது. இதற்காக 145 தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டது. அதே நேரத்தில் பராமரிப்புக்காக 150 புதிய நபர்கள் பணி அமர்த்தப்பட்டனர். இதனால் 20 ஆண்டுகளாக பணி செய்து வந்த ஒப்பந்ததொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே பணிசெய்து வந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கே வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து சிஐடியுபொதுத்தொழிலாளர்சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.சங்கத்தின் தலைவர் ஆர்.ஜெயராமன், செயலாளர் கே.ஆர்.முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் எம்எப்எல் நிர்வாகத்தின் தலைமை மேலாண்மை இயக்குநர் முன்னிலையில் ஒப்பந்ததாரர்களிடம் மீண்டும் பணிவழங்க வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் பயனாக அனைவருக்கும் வேலை வழங்கப்பட்டது. இது சிஐடியு வின் கூட்டு நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி என தொழிலாளர்கள் பாராட்டினர்.  

;