தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்;
மொத்த காலியிடங்கள்: 93
பணி: Social Security Officer
பணி: Manager Gr-II
பணி: Superintendent
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வணிகவியல், சட்டம், மேலாண்மை பிரிவில் பட்டம் பெற்றவர்கள் முக்கியத்துவம் அளிக்கப்படும். கணியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.44,900 – ரூ.1,42,400 வரை
வயதுவரம்பு: 21 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, கணினித் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் பிரிவினர் ரூ.250, மற்ற பிரிவினர் ரூ. 500 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.04.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.esic.nic.in/attachments/recruitmentfile/137aadcd28fca627bf24b12befd88720.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.