திருப்பூர், செப். 15 - விவசாய விளைநிலங்களில் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டப் பணியை மாற்று வழியில் நிறைவேற்ற வலியுறுத்தி விவசா யிகள் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். விவசாய விளைநிலங்கள் வழி யாக பாரத் பெட்ரோலியத்தின் ஐ.டி.பி.எல். எண்ணெய் குழாய் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. மாற்று வழியில் சாலை யோரமாக செயல்படுத்த வேண் டும். கொரோனா காலத்தை பயன் படுத்தி விவசாயிகள் நசுக்கி திட்ட பணிகளை நிறைவேற்றுவதை கைவிட வேண்டும். 2013 ஆம் ஆண்டு கெயில் எரிவாயு குழாய் திட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி தமி ழக அரசு இத்திட்டத்தையும் சாலை யோரமாக செயல்படுத்துவதாக அறிவிப்பு செய்ய வேண்டும் எனக் கோரியும், அதுவரை இத்திட்ட பணிகளை முழுவதுமாக நிறுத்தி வைக்க கோரியும், நடப்பு சட்ட மன்ற கூட்டத்தொடரிலேயே இதற்கான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் பாரத் பெட்ரோலியம், ஐ.டி.பி.எல். திட்டத்தால் பாதிக் கப்படும் விவசாயிகளின் கூட்ட மைப்பு சார்பில் செவ்வாய்க் கிழமை முதல் திருப்பூர் உள்பட, பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட் டிருந்தது.
அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட் டம், கண்டியன் கோவில் கிராமம், கருங்காளிபாளையத்தில் பாதிக் கப்பட்ட விவசாய நிலத்தில் காத் திருப்பு போராட்டம் நடைபெற் றது. கூட்டமைப்பு சார்பில் நடை பெற்ற இந்த காத்திருப்பு போராட் டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் ஆர்.சண்முகசுந்தரம், மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளருமான ஆர்.குமார், கண்டியன் கோவில் ஊராட்சி தலைவரும், பிஏபி பாசன சபைத் தலைவருமான டி.கோபால், உழ வர் உழைப்பாளர் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சோம சுந்தரம், திமுக விவசாய அணி மாவட்ட இணைச்செயலாளர் பி.ரத்தினசாமி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநி லத் துணைத்தலைவர் கே.பி. சண்முகசுந்தரம், தமிழக விவசாய பாதுகாப்பு சங்க மாநிலச் செயலா ளர் எஸ்.முத்துவிஸ்வநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜி.கே. கேசவன், விவசாய சங்கத் தலை வர் தூரன் நம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா போராட்டக் குழுவோடு அமை திப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாற்றுத் திட்டமாக சாலையோரமாக கொண்டு செல்வது குறித்து அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்வது. தமிழக அரசு மாற்றுத் திட்டம் குறித்து முடிவெடுக்கும் வரை ஐ.டி.பி.எல். திட்டப் பணி கள் அனைத்தையும் நிறுத்தி வைப்பது. வரும் 23-ஆம் தேதி காங்கேயத்தில் அறிவிக்கப்பட்டி ருந்த விசாரணை ஒத்தி வைக்கப் படுகிறது என மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் கோட்டாட்சியர் உறுதியளித்தார்கள். இதைய டுத்து விவசாய சங்க நிர்வாகிகள் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.
தருமபுரி
இதேபோல் தருமபுரி மாவட் டம், பாப்பாரப்பட்டியில் நடை பெற்ற காத்திருப்புப் போராட்டத் தில் கூட்டமைப்பின் மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ரவீந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அர்ச்சுணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மல்லையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் குமார், அம முக தர்மபுரி கிழக்கு மாவட்ட செய லாளர் டி.கே.ராஜேந்திரன், அரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் ஆர்.ஆர்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப் பட்ட நிலையில் விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்தனர்.
சேலம்
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி கொங்கணா புரம் ராகியம்பட்டி பகுதியில் நடை பெற்ற காத்திருப்பு போராட்டத் தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, திமுக மாநில விவசாய தொழிலா ளர் அணி இணைச் செயலாளர் காவேரி, விவசாய வாழ்வுரிமை சங்க செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இத னைத்தொடர்ந்து, சம்பவ இடத் திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில், நடை பெற்ற காத்திருப்பு போராட்டத் தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப் பினர் கணேசமூர்த்தி, கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர்கள் முனு சாமி, பொன்னையன், தாசில்தார் ரவிசந்திரன் உட்பட பலர் பங் கேற்றனர். இதையடுத்து, ஆர்.டி.ஓ சைபுதீன் தலைமையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்ட நிலையில் விவ சாயிகள் தற்காலிகமாக போராட் டத்தை ஒத்திவைத்தனர்.