tamilnadu

img

8 மாதங்களில் 11 சாதி ஆணவப் படுகொலைகள்

ராணிப்பேட்டை, ஆக.25-  ராணிப்பேட்டை  அருகே தலித் இளைஞர் சாதி ஆணவப்படுகொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாத காவல்துறைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் பெருங்காஞ்சி கிராமத்தைச் சார்ந்த  கதிர்வேல் என்ற தலித்  இளைஞரும் அதே ஊரைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண்ணும் கடந்த இரண்டாண்டு காலமாக காதலித்து வந்தனர்.

இதை அறிந்த அப்பெண்ணின் பெற்றோர் கடந்த பிப்ரவரி மாதம்  கதிர்வேலின் தாயார்  மகேஸ்வரியை  அழைத்து உன் மகன் நடமாட முடியாது என மிரட்டியுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் அப்பெண்ணின் குடும்ப நண்பர் கார்த்திக் எனபவர் கதிர்வேலுக்கு  போன் செய்து காதலிப்பதை கைவிடா விட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியிருக்கிறார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 19 இரவு  9 மணிக்கு அப்பெண்ணின் அலைபேசி யில்  இருந்து அழைப்பு வந்துள்ளது. உடனே கிளம்பி வீட்டை விட்டு வெளியே சென்ற கதிர்வேல் வீட்டுக்குத் திரும்பவே இல்லை.எங்கு தேடியும் கதிர்வேலைக் காணவில்லை.அதே நேரத்தில் கதிர்வேல் காதலித்த பெண்  அவரது வீட்டில் தான் இருந்துள்ளார்.

இந்நிலையில்  கதிர்வேலின் செருப்பு அவ்வூரில் உள்ள கிணற்றில்  மிதந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த கதிர்வேலின் தாயார் சோளிங்கர் கொண்ட பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். காவல் துறையினர்  கிணற்றில் தேடி கதிர்வேலின் உடலை மீட்டுள்ளனர்.

இதனால் கொதிப்படைந்த கதிர் வேலின் நண்பர்கள் அப்பெண்ணின் வீட்டார்களிடம் நியாயம் கேட்ட போது அப்பெண்ணின் தந்தை சுரேஷ், கார்த்திக் மற்றும் அக்குடும்பத்தார் கம்பு, கத்தி, அரிவாளுடன் அந்த இளைஞர்களை சரமாரியாக தாக்கி யுள்ளனர். இதில் கதிர்வேலின் நண்பர் வல்லரசுக்கு மண்டை உடைந்து  16 தையல் போடப்பட்டுள்ளது.

மணிகண்டன் என்பவருக்கு மூக்கு எலும்பு முறிந்துள்ளது.கேசவா  என்பவரும்  படுகாயம் அடைந்துள் ளார். இவர்கள் மூவரும் அடுக்கம் பாறை அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வல்லரசு,மணிகண்டன்,கேசவா ஆகியோரைத் தாக்கியவர்கள் தான் கதிர்வேலைக் கொலை செய்தார்கள் என்பதும் தெளிவாகியுள்ளது.ஆனால்  மூவரைத் தாக்கியதற்கான வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.கதிர்வேலை கொலை செய்வதற்கான கொலை வழக்குப் பதிவு செய்ப்பட வில்லை என்பதை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே காவல்துறை உடனடியாக கதிர்வேலின் படுகொலைக்கு காரண மான  அனைவரின் மீதும் கொலை வழக்கு  மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து குற்ற வாளிகள் அனைவரையும் உடனடி யாக கைது செய்ய வேண்டும்.

கதிர்வேலை விரும்பிய அப்பெண்ணிற்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டும்.

கதிர்வேலின் குடும்பத்திற்கு நீதியையும், நிவாரணத்தையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கிட வேண்டும். 

மேலும் தமிழகத்தில் கடந்த எட்டு மாத காலத்தில் 11 சாதி ஆணவப் படு கொலைகள் நடந்துள்ளன. தமிழ கத்தில் அதிகரித்து வரும் சாதி ஆண வப் படுகொலைகளை தடுப்பதற்கு தமிழக அரசு சிறப்புச் சட்டத்தை உடனடியாக கொண்டுவர வேண்டும் எனவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணி தமிழக அரசை வலியுறுத்து கிறது.

நேரில் ஆறுதல்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கதிர்வேலின் பெற்றோர் மற்றும் நண்பர்களை நேரில் சந்தித்து தீ.ஒ.மு மாநில துணை பொதுச் செயலாளர்கள் பி.சுகந்தி,  பி. செல்வன், பொருளாளர் இ.மோகனா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என். காசிநாதன், தீ.ஒ.மு மாவட்ட தலைவர் ரகுபதி, மாவட்ட செயலாளர் சீனி வாசன், வேலூர் மாவட்ட செய லாளர் குபேந்திரன், ஆட்டோ சங்கம் மாவட்டச் செயலாளர் கேகேவி. பாபு, விவசாய சங்க வட்டார குழு  உறுப்பினர் நிலவு குப்புசாமி, வாலிபர்  சங்கத்தின் எஸ். செந்தில், ஹரி. கார்த்திக், வழக்கறிஞர். மருதன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.