11, 12 துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு
சென்னை, ஜூன் 4- தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 6 அன்று வெளியாகின. 7 லட்சத்து 50 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் 94.56 விழுக்காடு மாண வர்கள் தேர்ச்சி பெற்றனர். 5.44 விழுக் காடு பேர் தேர்வில் தோல்வி அடைந்த னர். இவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 16 அன்று முதல் ஜூன் 1 வரை அவகாசம் விடுக்கப்பட்டது.
மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தனித்தேர்வர்கள் மாவட்ட இ-சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டது.
இந்நிலையில், 11-ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு க்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் திங்களன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூன் 24 அன்று துவங்கி ஜூலை 1 வரை நடைபெற உள்ளன. 11-ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை 2 அன்று துவங்கி ஜூன் 9 வரை நடைபெற உள்ளன.
பிச்சாவரம் சுற்றுலாவுக்கு ஆன்லைன் முன்பதிவு
சிதம்பரம், ஜூன் 3- தமிழ்நாட்டின் சுற்றுலா தலங்களில் ஒன்று பிச்சாவரம். கடலூர் மாவட்டத்தில் உள்ள கிள்ளை பேரூ ராட்சியில் அமைந்துள் ளது இந்த சுற்றுலா மையம். இங்கு 5 ஆயிரம் ஏக்கர் சதுர பரப்பளவில் அலையாத்தி காடுகள் உள்ளது. இந்த காடுகளில் இடையே உள்ள வாய்க்கா லில் சுரபுன்னை மரங்கள் அடர்ந்து உள் ளன. இங்கு தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் அலையாத்தி காடுகளில் உள்ள வாய்க்காலில் படகு சவாரி செய்யும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இங்கு படகு சவாரி செய்ய தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநி லங்கள், நாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தொலை தூரங்களில் இருந்து வரும்போது சில நேரங்களில் படகு சவாரி செய்யும் வாய்ப்பு கிடைக் காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல் கின்றனர். எனவே, ஆன்லைன் மூலம் ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன் பதிவு (புக்கிங்) செய்யும் வசதியை சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீடு திரும்பினார்
சென்னை, ஜூன் 3- கடந்த மே 25 அன்று நெல்லை சென்றிருந்த வைகோ, அங்கு கால் இடறி விழுந்து காயம் அடைந்தார். அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை அழைத்து வரப்பட்டு அப்பல்லோ மருத்துவமனை யில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. அப்போது, தோள்பட்டையில் மூன்று இடங்களில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவை சரிசெய்ய டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டது.
இந்நிலையில், 7 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைகோ, திங்கட்கிழமை (ஜூன் 3) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார். அவரை தொடர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கால்நடை மருத்துவப் படிப்பு
விண்ணப்பப் பதிவு தொடங்கியது
சென்னை, ஜூன் 3- தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன் லைனில் விண்ணப்பிப் பது திங்கட்கிழமை ஜூன் 3 காலை 10 மணிக்கு தொடங்கியது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் - தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி - வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்து வக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரி களில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பரா மரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ் சி.- ஏ.ஹெச்) 660 இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு ஜூன் 21 மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக் கலாம். தகவல் தொகுப்பேடு, சேர்க்கை தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதர விவரங்களை இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
3 நாள் கனமழை வாய்ப்பு
சென்னை, ஜூன் 4- தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 4, 5 தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ் ணகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.