tamilnadu

கைவிரல் மையை காட்டினால் ஓட்டல்களில் 10 சதம் தள்ளுபடி

சென்னை, ஏப்.13-மக்களவை தேர்தலில் வாக்களித்ததற்கான கை விரல் மையை காட்டினால் ஓட்டல்களில் சாப்பிடுபவர்களுக்கு 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்று ஓட் டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் வெங்கடசுப்பு கூறியதாவது:-தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் தேர்தல் நாளன்று வாக்களித்ததற்கான அடையாளமாக கை விரலில் உள்ள மையை காண்பித்தால் மாலை 6 மணிக்கு மேல் ஓட்டலில் சாப்பிடுபவர்களுக்கு பில் தொகையில் 10 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும்.மக்களிடையே வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த தள்ளுபடியை நடைமுறை படுத்துகிறோம். எங்களது அறிவிப்பை சமூக வலைதளங்களில் மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். வருகிற 17 ஆம் தேதி ஓட்டல்கள் முன்பு அறிவிப்பு பலகையும் வைக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.