tamilnadu

img

தோழர் கே.வரதராசன் மறைவு: தலைவர்கள் இரங்கல் என்.சங்கரய்யா இரங்கல்

சென்னை மே 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர்களில் ஒருவ ரான தோழர் கே.வரதராசன் மறைவு பேரதிர்ச்சி என்றும் இது பொதுவுடமை இயக்கத் திற்கும் விவசாயிகள் இயக்கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும் அவரை பிரிந்து வருந்தும் குடும்பத்தாருக்கும் கட்சி தோழர்களுக்கும் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல்  கட்சி தலைவர்களும் அமைப்பு களைச் சார்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

நம்பிக்கைச் சுடர்...
வைகோ (மதிமுக): மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மூத்த தலைவர் தோழர் கே. வரதராசன் பொது உடமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அரசுப் பணியிலிருந்து விலகி, முழு நேரக் கட்சித் தொண்டராகி பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட அர்ப்பணிப் புடன் பணியாற்றினார். மாநில அளவில் மட்டுமின்றி அகில இந்திய அளவில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று,  விவசாயிகளுக்காகப் போராடி விவசாயிகளின் வாழ்வில் நம்பிக்கைச் சுடரை ஏற்றுவதற்குப் பல போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வழி நடத்திய பெருமைக்குரி யவர். பொது உடமை இயக்கத்தில் இளைஞர் களை ஈர்ப்பதற்கு பயிற்சிப் பட்டறை நடத்திய தோழர் கே.வி., சீரிய சிந்தனையா ளர். அவரது ‘தத்துவ தரிசனம்’ உள்ளிட்ட பல நூல்கள் காலத்தால் அழியாதவை.

நிலைத்து நிற்கும் புகழ்...
இரா.முத்தரசன் (சிபிஐ): அனைவராலும் கே.வி. என்று அன்புடன் அழைக்கப்படும் தோழர் கே. வரதராசன், பொன் மலை ரயில்வே தொழிலாளர் போராட்டம், விவசாயிகள் நடத்திய நிலச்சீர்திருத்த இயக்கங்களால் ஈர்க்கப்பட்டவர். கட்சியின் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு முத்திரை பதித்தவர். இந்துமதத்தின் சனாதான சமூக சதிகள் குறித்தும், சாதி, வர்க்கம் என்ற கட்டமைப்பில் உள்ள பிரச்சனைகள் உட்பட அவர் எழுதியுள்ள சில படைப்பு கள் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

பன்முகத்தன்மை...
அ.சவுந்தரராசன்,ஜி. சுகுமாரன் (சிஐடியு): கே.வி. என்று  அன்போடு அழைக்கப்படும் தோழர் கே.வரதராசன் அவர்களது மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம். தோழர் கே.வி. சிறந்த மேடை பேச்சாளர், எழுத்தாளர், கலை இலக்கியத்தில் பன்முகம் கொண்டவராக திகழ்ந்தார். அவரது மறைவுக்கு செவ்வஞ்சலி செலுத்துகிறோம்.

ஒளி விளக்காய்...
பெ.சண்முகம் (விவசாயிகள் சங்கம்): அகில இந்திய விவ சாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மகத்தான தலைவர்களில் ஒருவராகவும் திறம்பட செயல்பட்ட தோழர். பல தலைவர்களை உரு வாக்கிய தலைவர் அவர். கிராமப்புற மக்களை அமைப்பு ரீதியாக திரட்டுவதில் முத்திரை  பதித்தவர். விவசாய தொழிலா ளர்கள், மலைவாழ் மக்களை திரட்டுவதில் ஆழ்ந்த அக்கறை செலுத்தியவர். வாச்சாத்தி வன்கொடு மையை எதிர்த்த போராட்டத்தில் தொடர்ந்து வழிகாட்டியவர். மார்ச் 16,17 தேதிகளில் பெத்த நாயக்கன் பாளையத் தில் நடை பெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டது தான் அவரின் கடைசி நிகழ்ச்சி யாக அமைந்து விட்டது. அவரு டைய அனுபவம் விவசாயிகள் இயக்கத்திற்கு என்றென்றும் வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழும். மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் விவசாயிகள் சங்க கொடிகளை மூன்று நாட்க ளுக்கு அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுகொள்கிறோம்.

அர்ப்பணிப்பின் அடையாளம்
மறைந்த தோழர் கே.வரத ராசன், தமிழகத்தில் விவசாயி கள் மற்றும், விவசாயத் தொழி லாளர்களின் எழுச்சிமிக்க போராட்ட இயக்கங்களை கட்டி வளர்த்த மகத்தான தலைவர் களில் ஒருவர், அர்ப்பணிப்புமிக்க கம்யூனிஸ்ட், அவரது மறைவு தமிழக விவசாயிகள் - விவ சாயத் தொழிலாளர் இயக்கத் திற்கு பேரிழப்பு என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம் ஆகியோர் கூறியுள்ளனர்.

மகத்தான தலைவர்...
எஸ்.திருநாவுக்கரசு (முன்னாள் தலைவர்): தோழர் கே.வி. நமது ஆசான். அவருடைய  மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதது வேதனையளிக்கிறது. கிராமப்புற இயக்கங்களான விவசாயிகள் சங்கம், விவசாய  தொழிலாளர்கள் சங்கம் ஆகிய வைகளை வளர்த்தெடுப்பதில் சிறப்பான பங்காற்றிய மகத்தான தலைவர். கட்சி, விவசாய சங்கம், விவ சாயத் தொழிலாளர் சங்கத்தை வளர்த்தெடுக்க வேண்டுமானால் பொறுத்தமான ஊழியர்களை கொண்டு கட்டியமைக்க வேண்டும் என்று மாநிலம் முழு வதும் ஏராளமான ஊழியர்களை கண்டறித்து, பொருத்தமான அமைப்புகளில் பொருத்தி வழிகாட்டினார். ஊழியர்களுக்கு மார்க்சிய போதனைகளை கொடுத்து போராட்ட நடவடிக்கைகளில் ஈடு படுத்தி தகுதி வாய்ந்த ஊழி யர்களாக உருவாக்கினார். அவரது மறைவு பேரிழப்பாகும். அவரது சிறந்த வழிகாட்டல் களை நெஞ்சில் நிறுத்துவோம்.

என்.சங்கரய்யா இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த  தலைவர்  கே.வரதராசன் மறைவுக்கு கட்சியின் முதுபெரும் தலை வர் என்.சங்கரய்யா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:

தோழர் கே.வரதராசன் திடீர் மறைவு, விவசாயிகள் இயக்கத்திற்கும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மாபெரும் பேரிழப்பாகும். அவர் திருச்சி மாவட்டத்தில் விவ சாயிகள் சங்க, விவசாய தொழிலாளர் சங்கத்தை துவக்கி தமிழ்நாடு முழுவதிலும் அவர் அந்த இயக்கத்தை வளர்ப்ப தற்காக அரும்பாடுபட்டார். அதனுடைய விளைவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினுடைய தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் நீண்டகாலம்செயல்பட்டார்.

அவருடைய விவசாய சங்கத்தின் அரும்பணியானது அகில இந்திய அளவில் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு கட்சி  அவரை உயர்த்தியது. அந்த பொறுப்பிலும் அவர் அகில  இந்திய ரீதியில் விவசாயிகள் இயக்கத்திற்கு சீரிய தொண்  டாற்றினார். தோழர் வரதராசன் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய  திருச்சி மாவட்டச் செயலாளர் பொறுப்பி லும் பின்னர் தமிழ்மாநிலக்குழுவிலும், மாநில செயற்குழு விலும் அதன் பின்னர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பின ராகவும் செயல்பட்டார்.

அவருடைய பொறுப்புகளை ஆய்வு  செய்த கட்சியின் தலைமை அவரை அரசியல் தலை மைக்குழுவுக்கு தேர்ந்தெடுத்தது. அந்த பொறுப்பிலும் அவர் விவசாயிகள் இயக்கத்  திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கும் முக்கியமான பங்காற்றினார். அவருடை திடீர் மறைவால்  நமக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த துயரத்தை  தாங்கிக்கொண்டு  தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்க ணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும்  விவசாய இயக்க ஊழியர்களும் அவருடை  மறைவு தங்க ளுக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பாக கருதிக்கொண்டு தமிழ்நாட்டில் அவர் விட்டுச் சென்ற பணியை சிறப்பாக முடிப்பதற்கும் ஒரு பலம் பொருந்திய விவசாயி மற்றும் விவசாய தொழிலாளர் இயக்கத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை வளர்ப்பதற்கும் தோழர்கள் அரும்பாடு படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தோழர் கே.வரத ராசன் மறைவால் பெரிதும் துயருற்றிருக்கும்  அவருடைய  மகளுக்கும் மகனுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க வரதராசனின் புகழ். இவ்வாறு என்.சங்கரய்யா கூறியுள்ளார்.

 

சமூகநீதி இயக்கத்துக்கு பேரிழப்பு...
கே.சாமுவேல்ராஜ், த.செல்லக் கண்ணு (தீண்டாமை ஒழிப்பு  முன்னணி): தலித் மக்களின் உரி மைகளுக்கான பிரச்சனை களுக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கிய முதுபெரும் தலைவர் தோழர் கே. வரதராசன், அகில  இந்திய அளவில் தலித்து களுக்கான கட்சியின் உப குழு வின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். அகில இந்திய அளவில் தலித்  ஒடுக்குமுறை விடுதலை முன்னணி என்கிற அமைப்பு உரு வாக்கப்பட்டதிலும் தோழரின் பங்களிப்பு போற்றத்தக்கதாகும். கருத்தியல் தளத்திலும் அவரது நூல்கள் முக்கிய பங்காற்றின. குறிப்பாக 'சாதி- மதம்-வர்க்கம்' என்கிற அவரு டைய நூல் அடிப்படையானது. சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பிற்கு கரத்தாலும், கருத்தா லும் போராடிய தோழரது மறைவு சமூக நீதி இயக்கத்திற்கு பெரும் இழப்பாகும்.

தையல் கலைஞர்கள் சம்மேளனம்
தமிழ்நாடு தையல் கலை ஞர்கள் சம்மேளன தலைவர் ப.சுந்தரம், பொதுச்செயலாளர் ஐடாஹெலன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், தோழர் கே.வரதராசன், விவசாய மக்களின் துயர் துடைக்க அகில இந்திய அளவில்  போராட்டங்களை வழிநடத்திய வர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், உழைப்  பாளி வர்க்கத்தின் மேன்மைக்காக வும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். அவரது லட்சிய கனவை நிறைவேற்ற பாடு படுவோம்.

பத்திரிகையாளர் சங்கம்...
தென்னிந்திய பத்திரிகை யாளர்கள் யூனியன் சார்பில் மாநிலத் தலைவர் ஆர்.சந்திரிகா, பொதுச் செயலாளர் எஸ். மாரியப்பன், மாநில முதன்மைச் செயலாளர் பி. வஜ்ரவேல் ஆகி யோர் வெளியிட்டிருக்கும் இரங்கல் அறிக்கையில் கூறி யிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் முக்கியமானவரும் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான தோழர் கே‌.வரதராசன் இயற்கை எய்தினார் என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. விவசாய இயக்கங்கள் தொடர்பான பல நூல்களையும் தத்துவ தரிசனம் என்னும் தலைப்பில் பொது உடமை சித்தாந்தத்தில் தன் அனுபவ பதிவுகளை புத்தகங்களாக வெளி யிட்டிருக்கிறார். ஏராளமான பொதுவுடமை தலைவர்களை உருவாக்கிய தோழர் வரதராசனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் பொதுவுடமை இயக்கத் தோழர்களுக்கும் ஆழ்ந்த அனுதா பத்தை தெரிவித்துக் கொள்கி றோம்.

அஇவிதொச அஞ்சலி...

மறைந்த தலைவர் தோழர் கே‌.வரதராசனுக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அ.பழநிசாமி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சந்திரன், மாநகர் மாவட்டத் தலைவர் ஏ.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் என்.தங்கதுரை, புறநகர் மாவட்டத் தலைவர் ஜே.சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் எம்.கண்ணன், லால்குடி ஒன்றியச் செயலாளர் சி.கே.கே.பாலா புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளர் எம்.அடைக்கலராஜ், உப்பிலியபுரம் ஒன்றியத் தலைவர் ஏ.கணேசன்  ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
 

புதுச்சேரியில் அஞ்சலி...

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் வரதராசன் மறைவுக்கு புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் உள்ள மாநிலக் குழு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதேச  செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை வகித்தார். கே.வரதராசன் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மத்தியக்குழு உறுப்பினர் சுதாசுந்தரரா மன், தமிழ்நாடு  மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், மூத்த தலைவர் தா.முருகன், செயற்குழு, பிரதேச  குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.