புதுச்சேரி அரசின் கால தாமதத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்களின் படிப்பை உறுதி செய்யக்கோரி சென்டாக் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாநில தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்கினார். சங்கத்தின் அகில இந்திய இணை செயலாளர் ஆதர்ஷ் எம். ஷாஜி போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். மாநிலச் செயலாளர் பிரவீன்குமார்,சங்க நிர்வாகிகள் அபிஜித், ஸ்டீபன்ராஜ்,கோபி, மனோஜ், அசோக், பரத், புவி, தினேஷ் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.