tamilnadu

img

சிபிஎம் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக சி.சங்கர் தேர்வு...

காஞ்சிபுரம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட குழு இரண்டாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என்று இரு மாவட்டங்களானது.

புதியதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராக சி.சங்கர் தேர்வு செய்யப்பட்டார்.ஒன்றுபட்ட காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக செயல்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் காஞ்சிபுரத்தில் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். மாநிலக் குழு உறுப்பினர் வா.பிரமிளா கலந்து கொண்டார். 21 பேர் கொண்ட காஞ்சிபுரம் மாவட்டக்குழு புதியதாக தேர்வு செய்யப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டக்குழுவின் செயலாளராக சி.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக இ.முத்துக்குமார், கே.நேரு, சி.பாஸ்கரன், பி.ரமேஷ், ஆர்.மதுசூதனன், ஆர்.சௌந்தரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தின் பிரதான பிரச்சனைகள் குறித்த தீர்மானங்களும், தலைநகர் தில்லியில் மக்கள் விரோத மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு டிசம்பர் 4 முதல் தொடர் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பேரவையை நிறைவு செய்து கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பாஸ்கரன் நன்றி கூறினார்.

;