tamilnadu

img

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து

இஸ்லாமிய கூட்டுறவு ஸ்தாபனம் வலியுறுத்தல்

நியூயார்க், செப்.30- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை அளித்திட வகைசெய்திடும் 370ஆவது பிரிவைக் கொண்டுவர வேண்டும் என்று சவூதி அரேபியா, பாகிஸ்தான், அஜர்பை ஜான், துருக்கி, நைஜர் ஆகிய நாடுகளின் இஸ்லாமிய கூட்டு றவு ஸ்தாபனம் கோரியுள்ளது. புதன்கிழமையன்று இந்த ஸ்தாபனம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசு தன்னிச்சையாக சட்டவிரோதமாக ஜம்மு-காஷ்மீர் மாநி லத்திற்கு அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவின்கீழ் அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்திருப்ப தாகவும், இதனை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் இவ்வாறு கொண்டுவருவதன் மூலம் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்குக் கட்டுப்படுவதாக அளித்திருந்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெளியார் எவரும் சொத்துக்கள் வாங்க அனுமதிக்கக் கூடாது என்றும், அங்கே மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்க ளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கடுமையான அவ சரநிலை சட்டங்களை நீக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அங்கே மிகப்பெரிய அளவில் ராணுவத்தினரை நிறுத்தி வைத்திருப்பதையும் விலக்கிக் கொள்ளவேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் முடிந்த பின்னர், இந்த அறிக்கையை இஸ்லாமிய கூட்டுறவு ஸ்தாபனம் வெளியிட்டது. இந்த அமைப்பானது 57 நாடுகளைப் பிரதி நிதித்துவம் செய்கிறது. இந்த அறிக்கை குறித்து மத்திய அயல் துறை அமைச்சகம் கருத்து எதுவும் கூறிடவில்லை. இதனை நாட்டின் “உள்விவகாரம்” என்று கூறி வழக்கம்போல் கருத்துக் கூற மறுத்துவிட்டது. துருக்கி ஜனாதிபதி ரசிப் தய்யீப் எர்டோ கான், ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனை யை எழுப்பியிருக்கிறார். அவர் காஷ்மீர் முற்றுகையிடப் பட்டிருப்பது தொடர்கிறது என்றும், காஷ்மீர் மக்களுக்கு ஒரே தீர்வு பேச்சுவார்த்தை மூலம்தான் என்றும் வலியுறுத்தினார்.